பக்கம்:மொழியின் வழியே.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 39

எனவே இதுகாறுங் கூறியனவற்றால் செல்வமென்பது தம்மை உடைமையார்க்கு நலம் பயக்கும் உடைமை' என்ற முடிவிற்கு வருகிறோம். இந்த முடிவோடு நமது தலைப்பிற்கு வருவோமாயின் அதன் அமைவுப் பொருத்தத்தை நோக்க அது இன்றியமையாத ஒன்றென்பது போதரும். செவிச் செல்வம் என்பது நாம் விளக்குவதற்கு எடுத்துக்கொண்ட தலைப்பு. கேள்வியாகிய செல்வம், அல்லது செவியால் நுகரப்பட்டுப் பின் பெரும் பயன்கள் தரும் செல்வம் என்று இதை விரித்துக் கூற அமையும். இதனையுடையவர் எல்லாம் செவிச் செல்வர் அல்லது கேள்விச் செல்வர் எனத் தமது உரிமையைச் சுட்டிக் கொள்ளுதற்கு உரிய தகுதியுடையவரே. நூற்பொருளைக் கற்று அறிந்து அமைந்த சார்புடையோர் கூற, அதைக் கேட்டலாகிய உடைமையையே இங்கே செல்வமாகக் குறிக்கிறோம், பிற கேள்விகளைக் குறிக்கவில்லை. கேட்பது ஒரு தனி இன்பத்தைத் தரும். கேட்டதை நினைப்பது அதைவிடப் பேரின்பத்தைத் தரும். படிப்பது மனத்திற்கு மட்டும் இன்பத்தைக் கொடுக்கும். கேட்பது செவிக்கும் மனத்திற்கும், சிந்தனையுணர்வுக்கும் இடையறாத இன்பத்தைக் கொடுக்கும். இத்தகைய வேறுபாடே கல்விச் செல்வத்திற்கும் கேள்விச் செல்வத்திற்கும் இடையே உள்ளது. இதுபற்றியன்றே,

'கற்றலிற் கேட்டலே நன்று' "கேள்வி முயல்”

என்பனபோன்ற ஆன்றோர் வாய்மொழிகள் தோன்றின. ஆராய்ந்து அடங்கி அமைந்து கேட்பதே ஒரு பெரிய கலை. அந்தக் கலையில் வெற்றிபெறத் தலைசிறந்த முயற்சி வேண்டும். கேள்வி முயல் என்ற நுட்பம் துணுகி நுணுகி ஆராயத்தக்கது. இரும்பைத் தன்வயம் ஈர்க்கும் காந்தம் போல் கேட்போர் கூறுவோர் கருத்தமைதியைப் பொருத்தமாக மனத்திற் கொள்ள வேண்டும். பொருத்தமின்றி மாறுபடுமாயின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/41&oldid=621386" இலிருந்து மீள்விக்கப்பட்டது