பக்கம்:மொழியின் வழியே.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மொழியின் வழியே!

கூறுவார் கருத்தைக் கேட்பார்பிறழ உணர்ந்து மயங்க நேரிடும். எனவே மயக்கமின்றி உணரத் தயக்கமற்ற கேள்வியை முயல வேண்டும். முயற்சி திருவினை ஆக்குமல்லவா? கூறுவோர் கூறுங்கருத்தை உணர்கின்ற உணர்ச்சி வன்மை கேட்போருக்கு வேண்டும். அதைப் பெறுவதற்குத்தான் முயலவேண்டும். கூறுவோர் கருத்தைக் கேட்போர் புரிந்து கொள்வதும், புரிந்து கொள்ளாமையும், கேட்போருடைய உணர்ச்சி வன்மையையும், உணர்ச்சி மென்மையையும் பொறுத்த ஒன்றே யன்றிக் கூறுவோருடைய கூற்றைப் பொறுத்த ஒன்று அன்று. 'உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். உணர்ச்சி வாயிலாவது:- கூறுவோனது கூற்றை உணருந்தன்மை. உணர்வோர் வலித்தாவது:- கேட்போனது உணர்வு வலிமையைப் பொறுத்ததாம். 'கேள்வி முயல்' என்பதிலுள்ள 'முயல்” என்பதற்கு இதுகாறும் விளக்கம் கூறினோம்.இனி, செவிச்செல்வத்திற்கும்புவிச்செல்வத்திற்கும் இடையே உள்ள நடை வேறுபாடுகளைத் தொடுப்போம். காசும் பணமும் காணிகளும் பெருக வாழ்வோர் என்றைக் காவது ஒரு நாள் பிறர் ஏசும் வண்ணம் இகழ்ச்சி எய்த நேரிடுவது ஒருதலை. காசும் பணமும் நிலையில்லாத போலிச் செல்வங்கள். கண்டபொழுதே கண்டு உண்ட பொழுதே மகிழ்ந்து உறங்கித் திரியும் மனிதப் போலிகளின் தரங்கெட்ட வாழ்க்கையே காசு பணவாழ்க்கை. தங்களைப் பற்றி நினைக்கக்கூட அவர்களுக்கு நேரமில்லை. அவ்வளவு தூரமேன்? தங்களைப் படைத்த பொங்கருட் பெருமானை நினைக்க விடுவதில்லை அவர்கள் செல்வம். இரண்டை மூன்றாக்குவதிலும் மூன்றை நான்காக்குவதிலும் அவர்கள் முயல்கிறார்கள். இறுதியில் ஒன்றையும் இன்றாக்கி விடுகிறது அவர்களது போலி முயற்சி. பணம் ஒரு பெரிய போதைப் பொருள். ஏமாறுகிற மனிதன் பணத்தாலும் வாழ முடியாது. கேள்வியாற் பண்பட்ட மனிதன் பண்படுத்தாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/42&oldid=621387" இலிருந்து மீள்விக்கப்பட்டது