பக்கம்:மொழியின் வழியே.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 49

"கூண்டு குமுத மலர்,

சிரிக்கக் கோகனகம்

ஈண்டிதழ்ச் செங்கை குவிக்குமால்...' என இவைகளும் ஒருவகையில் மரபு வழுக்களே ஆவன. எனினும் இலக்கணை சமாதி, பிறிதின்குணம் பெறவணி, என வேறு வேறிடங்களில் வேறு வேறு பெயர்களால் இவற்றை அழகும் நயமும் மிகுந்தமை குறித்து அமைத்துக் கொள்ளுவர். இலக்கிய ஆசிரியர்கள் தங்களது தவறுகளை மன்றக்கும் ஒரு சாதனமாகப் பயன்படுத்துவது அன்று வழுவமைதி என்பது. ஒரு நயத்தையோ அழகையோ உண்டாக்க வேண்டிய விரைவில் சிறிய மரபுப் பிழை நேர்ந்துவிட்டால் வேறு வழியின்றிப் பயனின் மிகுதியை நோக்கி அமைத்துக் கொள்ளலாம். வழுவமைதியாய்ப் பெற்றுக்கொள்ள முடிந்த பயன் இந்த அளவினதே.

நிகழ்காலத்தில் மரபின் நிலை

புதுமை, புரட்சி என்ற சொற்கள் இரண்டும் இல்லாமற். போயிருக்குமானால் மரபு தவறி எழுதுகின்றவர்கள் இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் இரண்டு பிடி கொம்புகளை இழந்து போயிருப்பார்கள். பாட்டு, உரை, எழுத்து, பேச்சு ஆகிய எல்லாத் துறைகளிலும் மரபை எதிர்ப்பது, மீறுவது என்பது ஒரு பொழுது போக்கு விளையாட்டாகிவிட்டது இப்போது. இன்னும் விளக்கமாகச் சொல்லப் புகுந்தால் அதில் பலருக்குத் தனிப்பட்ட ஒர் ஆர்வமும் ஏற்பட்டிருக்கிறது. உண்மையில் இந்த நிலைக்கு யார் பொறுப்பு? என்று சற்றே சிந்தித்துப் பார்த்தால், உணர்ச்சிப்பெருக்கே, முடிவான காரணமாக முன்நிற்கிறது. உணர்ச்சிகளைப் பேசியோ, எழுதியோ வெளியிட வேண்டுமென்ற ஆசைத் துடிதுடிப்புப் பலரிடம் பற்றிக் கொண்டிருக்கின்ற அளவிற்கு உணர்ச்சிகளை மொ - 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/51&oldid=621396" இலிருந்து மீள்விக்கப்பட்டது