பக்கம்:மொழியின் வழியே.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 51

என்பது ஆறாம் வேற்றுமை அஃறிண்ை ஒருமைக்கு மட்டுமே பெர்ருந்தும். உயர்திணை ஒருமையோடோ பன்மையோடோ பொருந்தாது. எனது வீடு எனது புத்தகம் என்று கூறலாம். உயர்திணை முன் வருமானால் என்னுடைய நண்பர் எனக்கு நண்பர், என் நண்பர் என்றே கூறவேண்டும். - -

தமிழில் பெரும் புலவர்களாகிய பலருக்கும் கூட ஏறக் குறைய இந்த முறை இப்போது மறந்துபோய்விட்டது என்றே சொல்லலாம். பங்கு எடுத்துக் கொள்ளுதல் என்று தொடர் அமைவது தமிழ் மரபு இல்லை. 'Take Part என்ற ஆங்கிலத் தொடரை நாம் பங்கெடுத்துக் கொண்டார் என்று தமிழ் வழக்கில் பிழையற்ற மரபைப் போலவே மனத்திருப்தியோடு பேசவும் எழுதவும் செய்கிறோம். இன்னும் இவைபோலக் காலத்தால் அமைந்து அடங்கிப் போன மரபு வழுக்கள் எண்ணற்றவை. மொழியைக் கற்பவர்களையும், கற்க விரும்பு கின்றவர்களையும் அச்சுறுத்துகின்ற அளவிற்கு மரபைக் கடைப்பிடிக்காவிட்டாலும் மொழியின் நன்மையைப் பாதுகாக்கின்ற அளவிற்காவது மரபைக் காப்பாற்ற வேண்டும். கைக்கொண்டு கடைப்பிடிக்க வேண்டும். நம்முடைய அசாத்திய முன்னேற்றத்திற்கு நடுவே இந்தச் சில மரபு வழுக்களையும் களைந்துவிட்டு மேலும் முன்னேற முயற்சி செய்ய வேண்டும். 口

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/53&oldid=621398" இலிருந்து மீள்விக்கப்பட்டது