பக்கம்:மொழியின் வழியே.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 53

இன்பம் ஐம்புலன்களும் பொருந்தி (கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று) இருப்பதால் அவனுக்குப் பிறந்த மகனும் அவனது புலன்களாகிய அக நடத்தைகளுக்கு விளக்கமாக அமைகிறான். தகப்பனது மன நிலை அந்த நேரத்தில் ஏற்பட்ட புலன்களின் பொருந்திய தொடர்ச்சியால் மகனிடமும் அமைந்துவிடுகிறது. இவை போன்ற உண்மைகளால் தகப்பனது அக நடத்தைகளை மகனிடம் அமையக் கண்டு, தகப்பன் தக்கான் அல்லது தகவிலான் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. -

இந்த ஆராய்ச்சிக்கு ஆதரவு கொடுக்கும் ஒரு சில சொற்றொடர்களைக் கிராமாந்திரங்களில் வேடிக்கையாகச் சொல்வதுண்டு. 'அப்பனைப்போல் மகன்' என்றும் 'மகனைப்போல அப்பன்' என்றும் சொல்லுவார்கள். பிரசவ வீடுகளுக்குச் சென்று குழந்தையைப் பார்த்து வரும் உறவினர்களில் சிலர், 'அப்பாவைக் கொண்டிருக்கிறான் பிள்ளை' என்று கூறிக்கொள்வார்கள். சிலர் பிள்ளைகள் பிடிவாதத்திலோ நல்ல குணத்திலோ ஒருவாறு தன் தகப்பனாரைப்போல இருந்துவிட்டால் 'தகப்பன் சாமி' என்று சொல்லிச் சிரிப்பார்கள். இவைகளெல்லாம் வேடிக்கை காரணமாகக் கூறப்படுவன என்றாலும், இவைகளின் அடிப்படைக் கருத்துக்கள் நமது கட்டுரைக்கு உறுதி பயக்கின்றன. இந்தச் சொற்றொடர்களைச் சிலர் வசை மொழியாக, "விதையைப் போலத்தானே முளையிருக்கும்", "அப்பனைப்போல் மகனும்', 'அந்தப் பயலுக்கு வாய்த்த, புத்திதானே இந்தப் பயலுக்கும்" என்று குரோதமாகக் கூறி விடுவார்கள்.

மேற்கூறிய இவை எல்லாம் சேர்ந்து 'மகனறிவின் தக்க தன்மை யல்லது தகவிலாத் தன்மையைக் கண்டு தந்தை யறிவின் தன்மையை நிர்ணயித்து விடலாம் என்ற மனோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/55&oldid=621400" இலிருந்து மீள்விக்கப்பட்டது