பக்கம்:மொழியின் வழியே.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மொழியின் வழியே!

தத்துவக் கருத்திற்கு ஊன்றுகோலாய் அமைகின்றதனால்தான் இங்கு எடுத்துக் கூறப்பட்டது.

இனி நமது பழந் தமிழ் இலக்கியங்களில் ஒரு சில வற்றில் இக் கருத்துக்களுக்கு ஆதரவு கொடுக்கும் பாடல்கள் காண்கின்றன. அவைகளைக்கொண்டு இக்கூற்றுக்கள் ஒருவாறு உண்மையாவதை அறியலாம். திருக்குறளில் நடுவு நிலைமை: என்ற ஒரு அதிகாரம் எட்டாவதாகத் திகழ்கிறது. அதிலே சிறந்த மனோதத்துவக் குறள் மணி ஒன்றைப் பதித்திருக்கின்றார் வள்ளுவனார். நடுவுநிலைமை என்பது அறத்தின் வழுவாமல் அனைவருக்கும் ஒப்ப நிற்கும் தன்மை. இதில், 'அறத்தின் என்பதற்கு அழுக்காறு, அவா, வெகுள், இன்னாச் சொல் என நான்கும் இல்லாத தன்மையோடு' என்பது விரிபொருள். 'அனைவர்க்கும் ஒப்ப நிற்றல்' என்பதற்கு அன்போடு சுற்றத்தார்க்குதவும் தூய வாழ்வு நடத்தல் என்பதைப் பொருளாகக் கொள்ளலாம்.

எனவே, மேற்கூறிய 'அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் இவை நான்கு மற்ற தன்மையோடு சுற்றத்தார்க்கு உதவி அன்பு செய்து வாழும் தூய வாழ்வே' நடுவு நிலைமைத் தன்மையானதொரு பேரறிவு ஆகும். இந்தத் தன்மை ஒரு தந்தையின்பால் அமைந்திருக்கிறதா, இல்லையா என்பதை அவனுடைய மகனது தன்மையைக் கொண்டு காணலாம். தம் குறளில் ஒரு சிறந்த மனோதத்துவ முடிவை வள்ளுவனார் தருகிறார். இன்று நுணுகி நுணுகி மேனாட்டிலும், மற்றெங்கும் ஆராயப்படும் இவ்விஷயத்தைத் திருக்குறளில் காணுகிறோம் என்றால் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும் அல்லவா? இதுதான் வள்ளுவர் கூறும் அந்த மனோதத்துவப் பேராராய்ச்சி முடிவு:

'தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப் படும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/56&oldid=621401" இலிருந்து மீள்விக்கப்பட்டது