பக்கம்:மொழியின் வழியே.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - - - - - - - - 55

இந்தக் குறளுக்கு உரை கூறவந்த பரிமேலழகர், எச்சம்' என்பதற்கு மக்கள் என்று பொருள் கூறினார்.

மேற்கூறிய மனோதத்துவக் கருத்துக்களை மனத்திற் கொண்டு தேர்ந்த பின்னரே பரிமேலழகர் இச் சொல்லுக்கு இச்சிறந்த பொருளைக் கூறியிருக்க வேண்டும். எச்சம் என்பதற்கு, ஒரு பொருளின் மீதமான பகுதி என்பது பொதுவான பொருள். ஒரு பொருளின் மீதமான பகுதியைக் கொண்டு - அந்த மீதப் பகுதியின் சுவை, பண்பு, தோற்றம் இவைகளைக் கொண்டு - முதற்பொருளின் தன்மையையும் கணக்கிட்டுவிட முடியும். ஆகையால், எச்சம் என்ற சொல்லின் அமைப்பே நமக்குப் பெருங் கருத்தைக் கொடுத்து விடுகிறது இங்கே. எனவே, நடுவு நிலைமை என்ற பேரறிவுத் தன்மை மிகவும் வாய்ந்திருக்கக்கூடிய ஒரு தந்தைக்கே அப்படி மகன் பிறக்க முடியும். ஆகையால், தத்தமக்குள்ள நடுவு நிலைமையைத் தம்முடைய மகனிடம் காணும்படி அவர்கள் மகனைப் பெற முயலும் ஐம்புலத் தொடர்பான நுகர்ச்சி காரணமாக மகனிடமும் தந்தையின் தன்மை அமைந்து விடுகிறது. அது காரணமாக மகனறிவேதந்தையின் அறிவிற்கு ஒரு விளக்கமாக முன் தொடர்பு தந்து நிற்கிறது. இதுவே இந்தக் கருத்துக்களாகிய மனோதத்துவத்தின் சிறந்த விதி. திருக்குறளிலிருந்து விரியும் இக்கருத்துக்களுக்கு வேறு நூலாதரவு இருந்தால்தானே வள்ளுவர் கருத்துக்கள் சிறப்படையும்? -

ஆகவே, வள்ளுவனார் கருத்துக்களுக்கு ஆதரவு கூறுகின்ற கீழ்க்காணும் பெருந்திரட்டுப்பாடல் வரிகளைக் காண்போம். . . . . -

'முக்குணந் தம்மின் மாறி முயங்கிடுந் தந்தைக்கப்போ தெக்குண முதிக்கும் பிள்ளைக் கக்குணம் விதியதாமால்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/57&oldid=621402" இலிருந்து மீள்விக்கப்பட்டது