பக்கம்:மொழியின் வழியே.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மொழியின் வழியே!

இப்பெருஞ் சான்றால் ஆசிரியர்திருவள்ளுவனார் கூறிய சிறந்த மனோதத்துவக் கருத்து, உண்மை முடிவு என்று அறியப் படுகிறது. . . . . -

இனி நாலடியார் என்ற நீதி நூலில் நமது கருத்துக்களுக்கு ஆதரவு பயக்கும் வெண்பா ஒன்று காண்கிறது. செந்நெல்லைப் பூமியில் விதைத்தால் அதே செந்நெல் பயிர்தான் முளைத்து எழும். வேறு ஏதாவது நன்றாக விளையாத நெல்லைப் போட்டால் அதே பலவீனமான சாவி நெற்பயிர்தான் முளைத்தெழும். எனவே, எந்த விதை இடப்படுகிறதோ அந்த விதையின் பயிரே முளைக்கும். தீய தந்தைக்குத் தீய மகனும் நல்ல தந்தைக்கு நல்ல மகனும்தான் பிறக்கிறான். விதைக்குத் தகுந்த முளைதான் முளைக்கிறது. முளையைப் பார்த்தால் விதை எப்படியிருக்கும் (வளமான நல்ல விதையா? அல்லது பலவீனமான தீய விதையா?) என்பதை அறிந்து கொண்டு விடலாம். இந்தத் தத்துவத்தை முதலில் உருவகப்படுத்தி விட்டுக் கடைசி அடியில் மகனறிவு தந்தையறிவு என்றார் சமண முனிவர். திருவள்ளுவர் கருத்துக்கு இங்குமொரு சிறந் விளக்கம் கிடைக்கிறது. இதோ அவ்வெண்பா:- -

"செந்நெல்லால் ஆய செழுமுளை மற்றுமச்

செந்நெல்லே யாகி விளைதலால் - அந்நெல் 'வயல்நிறையக் காய்க்கும் வளவயலூர

மகனறிவு தந்தை யறிவு." இதன் கடைசி அடியில் 'மகனறிவு தந்தை அறிவு' என்று கூறவந்த ஆசிரியர் மகன் என்ற சொல்லை முதல் நிலைக் கண் கூறினார். ஆகையால் மகனறிவின் தன்மையை ஆராய்ந்தாலே தந்தையறிவின் தன்மை தானாகப் புலப்படும் என்ற உண்மையைக் காண்கிறோம். இதிலிருந்து.மனிதனது முக்குணம்மாறும் மன நிலையே பிறக்கும் மகனிடம் பிரதி பலிக்கிறது என்று, மகனது தக்க தன்மை அல்லது தகவிலாத் தன்மையே தந்தையினது தன்மையைக் காணப் பயன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/58&oldid=621403" இலிருந்து மீள்விக்கப்பட்டது