பக்கம்:மொழியின் வழியே.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 57.

படுகிறது என்றும் மகனறிவு நடுவு நில்ைமையின் பாற்பட்டதாய் இருந்தால் தந்தையறிவு அஃதே என்றும் மகனுக்கும் தந்தைக்கும் உள்ள மனோதத்துவக் குணத் தொடர்பை அறிய இதனால்தான் முடியுமென்றும் நன்கு தெரிந்து கொண்டோம்.

மனித எண்ணங்களையும் மனித உணர்ச்சிகளையும் ஆராயும் மூலமாக இன்று மேலைநாட்டு ஆராய்ச்சியாளர்களும் மற்றுமுள்ள அறிஞர்களும் இவ்வுண்மையை வெளியிட்டாலும் என்றோ பழந் தமிழ் நூல்கள் இவ்வுண்மையை வெளியிட்டு விட்டன. நடைமுறை உலகில் நல்ல தந்தைக்குத் தீய மக்களும் தீய தந்தைக்கு நல்ல மக்களும் இருப்பதைப் பார்க்கும் போதுதான் நாம் இக் கருத்தை மேலும் ஆராய வேண்டி யிருக்கிறது. D

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/59&oldid=621404" இலிருந்து மீள்விக்கப்பட்டது