பக்கம்:மொழியின் வழியே.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. இரண்டு மணிமொழிகள்

'அ ப்பா இந்தக் குறள் பாடத்தில் வந்திருக்கிறதப்பா இதற்குப் பொருள் விளங்கவில்லை. சொல்லிக் கொடுங்களப்பா உயர்நிலைப், பள்ளியில் படிக்கும் என் தலைமகன் கையில் பாடப் புத்தகத்தோடு என் அருகே வந்து நின்றுகொண்டு கேட்டான். நான் அவன் கையிலிருந்த பாடப் புத்தகத்தை வாங்கினேன். அவன் சுட்டு விரலால் அந்தக் குறளைத் தொட்டுக் காட்டினான். . * *

'வேண்டாமை யன்ன விழுச் செல்வம்

ஈண்டில்லை யாண்டும் அஃதொப்பதில்' (37 - 3) இதுதான் அந்தத் திருக்குறள். பொருள்களின் மேல் ஆசைப் படாமலிருப்பதைப் போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை. மோட்ச உலகத்தின் கண்ணுமில்லை - இதுதான் பொருள். போய்ப் படி - என்று வார்த்தைக்கு வார்த்தை பொழிப்புரையாக ஒரு பொருளைக் கூறினேன். புரிந்து விட்டதுபோலப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு போய் விட்டான் பையன். இந்தக் குறளின் பொருள் அவனுக்குப் பரீட்சை எழுதும் அளவுக்குப் புரிந்தது. ஆனால், உலகில் இதன் பொருளைப் புரியாதார் எத்தனை பேர்? நான் கூறி அனுப்பிய இந்தச் சாதாரணமான பொருளால் அவன் மனம் தெளிவுற்றுச் சென்றுவிட்டது என்னவோ மெய்தான்! ஆனால், அவன் மனந்தெளிந்து செல்வதற்குக் காரணமாகப் பொருள் கூறித் தெளிவுறுத்திய என் மனம் விரைவாகக் கலங்கத் தொடங்கிவிட்டது! -

துறவிக்கு வேண்டாமை தான் விழுச் செல்வம்! அதை ஒத்த செல்வம் இவ்வுலகிலோ வேறெங்குமோ (துறக்கம் முதலியவற்றிலோ) இல்லை என்கிறார் நம்முடைய திருவள்ளுவர். ஆனால், என்னருகிருந்த டால்ஸ்டாய், காந்தி யடிகள், என்னும் மற்ற இருவரின் நூல்களோ, வேண்டாமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/60&oldid=621405" இலிருந்து மீள்விக்கப்பட்டது