பக்கம்:மொழியின் வழியே.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 63

இடத்தை மூன்று வெண்பொற் காசுகளுக்குக் கடைவீதியில் வாங்கியிருந்த ஒரு புது எழுதுகோலுக்கு அளித்திருந்தேன். ஆனால் அப்படியும் அந்தப் பழைய எழுதுகோல் உடைந்து போன துயர நினைவை மட்டும் என்னால் மறக்கவே முடிய வில்லை. புதிய எழுதுகோல் கையெல்லாம் மையாக ஆறி என்னை வருத்தும்போது கூடப் பழைய எழுதுகோல் இருந்தால் இப்படி எல்லாம் ஆகாதே’ என்ற எண்ணம் தோன்றி ஏங்கி நெடுமூச்சு விடச்செய்யும். அன்று காலையிலும் அப்படித்தான் ஏங்கிக்கொண்டே அந்தப் புது எழுதுகோலினால் வேண்டா வெறுப்பாக எழுதிக் கொண்டிருந்தேன். என் தலைமகன் அன்றொரு நாள் வந்ததுபோலவே பாடப் புத்தகமும் கையுமாக வந்தான். 'என்னடா வேண்டும்?" என்று நான் கேட்டேன். அன்றைக்குப் போலவே ஒரு குறளுக்குப் பொருள் தெரிய வேண்டுமப்பா என்று கேட்டான் அவன். 'என்ன குறளடா அது? - என்று வினவினேன்.

'இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்ப முறுதல் இலன்.' (குறள் 629) இந்தக் குறள்தான் அப்பா கணிரென்ற குரலில் குறளைக் கூறினான் புதல்வன். எதிர்பார்த்துக் கொண்டிருந்த கருத்துப் பல நாட்களுக்குப் பின் எதிர்பாராத விதமாக என்னை அடைந்துவிட்டது போன்ற நிலையைப் பெற்றேன் நான். பொறியை அமுக்கியதும் குபிரென்று பாய்ந்து எரியும் மின் விளக்கின் ஒளிபோல என் மனத்தில் ஒரு கருத்தொளி பாய்ந்தது. விரைவாக அவனுக்குப் பொருளைக் கூறி அனுப்பி விட்டு அன்று போலவே டால்ஸ்டாய், காந்தியடிகள், திருவள்ளுவர் ஆகிய மூவர் நூல்களையும் விரித்துக் கொண்டு சிந்தனை செய்ய அமர்ந்தேன். எனது சிந்தனையின் மணிமுடியாக அமைந்து முடிவு பெறவேண்டிய கருத்து இன்று - இப்பொழுது எனக்கு விளங்கிவிட்டது.

ஆனால், இந்தக் கருத்தை நான் விளங்கிக்கொள்வதற்கு என் விலையுயர்ந்த எழுதுகோல் பலியாகித் தீர வேண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/65&oldid=621410" இலிருந்து மீள்விக்கப்பட்டது