பக்கம்:மொழியின் வழியே.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மொழியின் வழியே!

மென்பதுதான் இறைவன் சித்தமோ என்னவோ? எந்தப் பொருளின் மேலும் அளவிற்கும் அதிகமான பற்றுக் கொண்டால் அந்தப் பொருளின் அழிவில் வேதனைப்பட வேண்டிய நிலை உறுதியாக ஏற்படும். - இந்த மெய் என் மனத்தில் பதிந்தது!

துறவிகளுக்கு எத்தகைய வேண்டாமை வேண்டும் என்பதை அவாவறுத்தலிலும், அரசியலாளர்க்கு எத்தகைய வேண்டாமை வேண்டும் என்பதைப் பொச்சாவாமையிலும்' (இகழ்ச்சியிற் கெட்டாரை என்ற குறள்) தனிமனிதனுக்குச் சமூக வாழ்விலே எத்தகைய பற்றற்ற நிலை வேண்டும் என்பதை இடுக்கணழியாமை"யிலுமாகக் கூறி விகிதப்படுத்தி டால்ஸ்டாய்க்கும், காந்தியடிகளுக்கும் தெளிவுரை கூறும் திருவள்ளுவர் புலமையை என்னால் வியவாமல் இருக்க முடியவில்லை. - -

டால்ஸ்டாயும், காந்தியடிகளும் எனக்குத் தெளிவாக விளக்க முடியாத ஒரு கருத்தை அவர்களுக்கும் முன்பேயிருந்து மறைந்த தமிழகத்துத் திருவள்ளுவர் உள்ளங்கை நெல்லிக்கனி என விளக்கிச் சென்றிருப்பதைக் கண்ட நான் அவருக்கு எந்த வகையில் நன்றி செலுத்துவது என்றறியாமல் திகைத் திருந்தேன். அப்போது பலகணிவழியே வீசிய காற்றில் திருக்குறள் புத்தகத்தின் பக்கங்கள் புரண்டு படபடத்தன. 'குறளை மீண்டும் மீண்டும் படித்து ஆழ்ந்து சிந்திப்பது மூலமாக நீ உன் நன்றியைச் செலுத்தலாம் என்று படபடத்த அந்த ஏடுகள் எனக்குச் சொல்வதுபோலிருந்தது.

‘'வேண்டாமை அன்ன

விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்பதில்.

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்

துன்ப முறுதல் இலன்.' - 口

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/66&oldid=621411" இலிருந்து மீள்விக்கப்பட்டது