பக்கம்:மொழியின் வழியே.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மொழியின் வழியே!

கூறியிருக்கிறார் வள்ளுவர். அதுதான் இங்கு அவரிடம் நாம்

காணும் பெரிய நயம்.

'குடம்பை தனித் தொழியப் புட்பறந்தற்றே உடம்போ டுயிரிடை நட்பு.”

(நிலையாமை - 8)

இஃது அறத்துப்பாலில் துறவறவியலில் நிலையாமை என்னும் அதிகாரத்திலுள்ள ஒரு குறள். முட்டை தனித்து நீங்கப் பறவை அதனைவிட்டுச் சென்றாற்போல உடம்பு தனித்து நீங்கும்படியாக அதனைத் தான் பிரிய வேண்டிய காலத்துப் பிரிந்து செல்லுவது உயிர். உடம்பும் உயிரும் அக்காலத்து அன்னவகையால் தொடர்பின்மையை உறுவன என்பது இக் குறளாற் போந்த கருத்து. இதனுள் நட்பின்மை'யை நட்பு என்று சுட்டியுள்ளார் வள்ளுவர். - - -

தமிழ் இலக்கண நூலார் இதனை எதிர்மறை இலக்கணை என்பர். இக்குறளைச் சுட்டி 'அபிதாமூலத் தொனி என்றும் விருத்த விலக்கணை என்றும் பிரயோக விவேக நூலார் விளக்கியுள்ளமை இங்கே ஒப்பு நோக்கி மகிழத்தக்கது. முட்டையிலிருந்து நீங்குவதற்கு முன் பறவைக்கும் முட்டைக்கும், உடம்பிலிருந்து நீங்குவதற்கு முன் உயிர்க்கும் உடம்பிற்கும், ஒரு குறிப்பிட்ட கால அளவு நட்பு உண்மையைக் கூறுவதற்கு அவ்வாறு இலக்கனைப் பொருளும், தொனி நயமும்பட அமைத்த நுணுக்கம் பாராட்டத்தக்கது. இக்குறளால் உடம்பிற்கும் உயிர்க்குமுள்ள தொடர்பு நிலையற்றது என்பதை நன்கு வற்புறுத்தும் இதே வள்ளுவர் உடம்பிற்கும் உயிர்க்கும் நிலைத்த தொடர்புள்ளது போல் வேறொரிடத்தில் வேறொரு உவமையைச் சொல்லி யிருப்பாராயின் அஃது ஆராய வேண்டிய ஒன்றல்லவா? மூவிரு குற்றமும் முற்றக் கடிந்து பற்றற்ற துறவிக்கு உடலுயிர் இயைபின் நிலையாமையை உணர்த்தவேண்டிய இடத்தில் அமைந்தது இந்த முதல் உவமை. ஈருடலும் ஒருயிருமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/68&oldid=621413" இலிருந்து மீள்விக்கப்பட்டது