பக்கம்:மொழியின் வழியே.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைப்பு, கூறும் முறை ஆகியவற்றால் வேறுபடும் கட்டுரைகளும் உண்டு. மொழியின் வழியே மனம் சென்றபோது சிந்தனைக்குப் பொருளானது எதுவோ அதற்கேற்ப அவை அமைந்திருக்கும்.

இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே வங்காளிகளுக்கு ஏற்பட்டிருக்கிற தாய்மொழியுணர்ச்சி நூறு ஆண்டுகளுக்குப் பின்பும் தமிழர்களுக்கு ஏற்படவில்லையே என்பதை நினைக்கும் போது - சிற்சில சந்தர்ப்பங்களில் நான் மனம் புழுங்கியது உண்டு. தமிழ் நன்றாகத் தெரிந்த தமிழர்களே தங்கள் தாய் மொழியில் உரையாடுவதற்கு வெட்கப்படுகிறார்களே!

இந்த நிலைகள் யாவும் மாறி நாட்டுணர்ச்சி, மொழியுணர்ச்சி பெருக வேண்டும். அப்படிப் பெருகுவதற்கு எதைச் சிந்தித்தாலும் நம்முடைய மொழியின் வழியே சிந்திக்கப் பழக வேண்டும். மாஸ்கோவிலோ, அமெரிக்காவிலோ, லண்டனிலோ, உங்கள் கால்கள் எந்த நாட்டின் வழியில் நடந்தாலும் மனம் தமிழ் வழியில் நடக்கட்டுமே!

இதுவே என் வேண்டுகோள். இந்த வேண்டுகோளுடன் நானும் தமிழ் புத்தகாலயத்தாரும் சேர்ந்து இந்நூலைத் தமிழ்ப் பெருமக்களுக்கு அளிக்கின்றோம்.

அன்பன், சென்னை நா.பார்த்தசாரதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/7&oldid=621352" இலிருந்து மீள்விக்கப்பட்டது