பக்கம்:மொழியின் வழியே.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. தென்னிந்திய மொழிகள்

'செப்பும் மொழி பதினெட்டு உடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள் - என்று கவியரசர் பாரதியார் பாரத தேவியின் மொழி வளத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். இந்தியாவின் மொழிகளைப் பற்றி ஆராயும்பொழுது ஒர் உண்மை நன்கு புலப்படுகிறது. வட இந்திய மொழிகளில் பெரும்பாலானவற்றிற்கு மூலகாரணமாகத் தமிழும் அமைந்திருப்பதுதான் அவ்வுண்மை. இலக்கணச் சிறப்பும், பண்பட்ட அமைப்பும் உள்ள உயர் தனிச் செம்மொழிகளே வேறு சில மொழிகளை உண்டாக்க முடியும். உயிரிலிருந்து உயிர்கள் பிறப்பதுபோல, ஒரு மொழியிலிருந்தே பிற மொழிகள் தோன்றுகின்றன. -

இந்தி மொழி, வங்க மொழி, மஹாராஷ்டிர மொழி ஆகிய மொழிகள் சமஸ்கிருதத்தைத் தாயாகக்கொண்டு, பிறந்தவை. இதேபோல் கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம் ஆகிய மொழிகள், தமிழைத் தாயாகக் கொண்டு பிறந்தவை. இவைகளின் தொகுதிக்கு மொத்தமான பெயராக அமைந்ததே 'தென்னிந்திய மொழிகள் அல்லது 'திராவிட மொழி இனங்கள் என்பது. தென்னிந்திய மொழி இனங்கள் ஒரே அடிப்படை அமைப்பைக் கொண்டவை. இந்த மொழிகள் தோன்றிய விதத்தைப் பற்றி ஆராய்வதற்கு, நிறைந்த சான்றுகள் உள்ளன. தென்னிந்திய மொழிகளில் இப்போது பெரு வழக்கில் உள்ள ஐந்து மொழிகளையே இங்கு உரைத்தோம். கால்டுவெல் இவற்றோடு இன்னும் ஏழு மொழிகளைச் சேர்த்து மொத்தம் பன்னிரண்டுமொழிகளைக் குறிப்பிட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, குடகு என்று ஆறு மொழிகள் பண்பட்ட திருத்தமான தென் னிந்திய மொழிகளாகவும், துதம், கோதம், கோண்டு, கந்தம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/71&oldid=621416" இலிருந்து மீள்விக்கப்பட்டது