பக்கம்:மொழியின் வழியே.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மொழியின் வழியே!

ஒராவோன், இராஜ் மஹால் என்ற ஆறு மொழிகள் பண் படாத - திருந்தா தென்னிந்திய மொழிகளாகவும் கால்டு வெல்லின் ஆராய்ச்சி கூறுகிறது. -

தோன்றிய விதம்

கால்டுவெல் கூறிய திருந்தாத மொழிகள் ஆறும் இக் காலத்தில் தென்னாட்டின் எப்பகுதியில் வழங்கப்படுகின்றன? எவரால் வழங்கப்படுகின்றன? என்றே தெரியவில்லை! திருந்திய மொழிகளாகிய தமிழ் முதல் குடகு ஈறான ஆறில், குடகு மொழி இக்காலத்தில் வழக்கிழந்து, ஏறக் குறைய கன்னடத்தோடு கலந்துவிட்டதால் ஏனைய நான்கு மொழிகளையே ஆராய்வது பயன்தரும் செயலாகும்.

கால வரம்புக்குட்படாத நாள் தொட்டுத் தமிழகத்தில் வழங்கி வந்த செந்தமிழ் மொழி, தனது நில எல்லையைச் சுற்றிப் பன்னிரு கொடுந்தமிழ் நிலங்கள் அமையப்பெற்று இருந்தது. செந்தமிழ் நாட்டார் வழங்கிய தமிழும் கொடுந்தமிழ் நாட்டார் வழங்கிய தமிழும் நாளுக்கு நாள் வேறுபாடுகள் பெருகி, மாறுபட்டுக்கொண்டே வந்தன. தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேண், பூழி பன்றி அருவா, அருவா வடதலை, சீத நாடு, மலாடு, புனல் நாடு என்பனவே அந்தப் பன்னிரண்டு கொடுந் தமிழ் நிலங்களின் பெயர்கள். இக் கொடுந் தமிழ் நிலங்களில் மாறுபட்டு வழங்கத் தொடங்கிய தமிழே நாளடைவில் மூன்று புது மொழிகளாக உருவடைந்தது. மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்பனவே அம் மூன்று மொழிகள். வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்' - என்று தொல்காப்பியர் எல்லை கூறுவதற்கு முன்னரே இப்புதிய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்திருக்க வேண்டும். ஒரு காலத்தில் தென்னாடு முழுவதும் ஆண்டு வந்த தமிழ், நாளடைவில் தன்னினின்றும் தோன்றிய கிளை மொழிகளுக்கும் இடம் ஒதுக்கிக் கொடுத்துவிட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/72&oldid=621417" இலிருந்து மீள்விக்கப்பட்டது