பக்கம்:மொழியின் வழியே.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மொழியின் வழியே!

விகாசம்' என்ற நூலில் தெரிந்துகொள்ளலாம். எது எவ்வாறு இருப்பினும் தென்னிந்தியாவில் தமிழுக்கு அடுத்தபடி அல்லது தமிழைவிட அதிக மக்களால் பேசப்படும் மொழி தெலுங்கு ஆகும்.

4. கன்னடம்

கர்நாடகம், கானரீஸ் என்று வேறு பெயர்களாலும் இதைக் கூறுவர். மைசூர்ப் பகுதி முழுமையிலும், மஹாராஷ் டிரத்தின் தென் பகுதியில் சில இடங்களிலும், ஹைதரா பாத்தின் மேற்குப் பகுதியில் சில இடங்களிலும் கன்னட மொழி பேசப்படுகிறது. நீலகிரியின் மேல்புறமுள்ள மக்கள் பேசும் பழைய கன்னடத்திற்கும் பிற பகுதிகளில் வழங்கும் கன்னட மொழிக்கும் அதிக வித்தியாசம் உண்டு. மலையாளக் கரையிலுள்ள கானராவில் கன்னடத்துடன், மலையாளம், மராத்தியின் ஒரு பிரிவான கொங்கணி, கன்னடமும் மலை யாளமும் கலந்து தோன்றிய துளு ஆகிய மூன்று மொழிகள் பேசப்படுகின்றன. டாக்டர் குண்டெர்ட், கரு+நாடு +அகம் என்ற மூன்று சொற்கள் சேர்ந்தே கர்நாடகமாயிற்று என்பர். மைசூர்ப் பகுதிகளைப் பழைய தமிழ் நூல்கள் எருமை நாடு: என்று குறிக்கின்றன. கன்னட மொழியின் எழுத்துக்களும் கிரந்த எழுத்துக்களை ஒத்தே அமைந்தன. 5. துளுவும் குடகும்

துளு, குடகு ஆகிய இவ்விரண்டு மொழிகளையும் கால்டுவெல் தென்னிந்தியாவின் பண்பட்ட மொழிகளாகக் கூறியிருப்பினும், இக் காலத்தில் இவை வழக்கும், சிறப்பும் இழந்துவிட்டன. மேலும், இவை தனி மொழிகளல்ல. மலையாளத்தின் பின்னமாகத் துளுவும், பழைய கன்னடத்தின் பின்னமாகக் குடகும் தோன்றின. இலக்கிய இலக்கணங்களோ, எழுத்து அமைப்போ ஏறக்குறைய இவ்விரு மொழிகளுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/76&oldid=621421" இலிருந்து மீள்விக்கப்பட்டது