பக்கம்:மொழியின் வழியே.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. மொழியும் நாடகமும்

உழைப்பதும், உண்பதும், இன்பத் துன்ப உணர்ச்சிகளை அநுபவிப்பதுமாக வாழ்ந்த மனிதனுக்கு ஒரு காலத்தில் ஒரு விநோதமான ஆசை உண்டாயிற்று. தன்னுடைய வாழ்க்கையையும், அதில் மலிந்து கிடக்கும் பல்லாயிரம் உணர்ச்சியலைகளையும் தன்னிலிருந்து பிரித்து வேறுபடுத்திக் கலையாக நிறுவிப் பார்க்க வேண்டுமென்ற ஆசைதான் அது. தன் முகத்தை அடிக்கடி கண்ணாடியில் அழகு பார்த்துக் கொள்வது போல் வாழ்க்கையை அரங்கத்தில் பார்க்க வேண்டும் - வாழ்வதுபோல் நடித்துப் பார்க்க வேண்டும், என்ற ஆசை ஏற்பட்டது. அவ்வாறு அரங்கத்தில் நடிக்கப் படும் வாழ்க்கை, உலகத்தில் வாழ்கின்ற நடைமுறை வாழ்வைக் காட்டிலும் தரமாய் வீறுமிக்கதாய்ச் சுவை பயப்பதாய், இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது.

- நடிப்பவர்களுக்குப் புகழும், காண்பவர்களுக்குச் சுவையும், தரக்கூடிய சிறந்த வாழ்க்கையை மேடையிற் சித்திரிக்க விரும்பினான் மனிதன். வாழ்வில் இருந்து கொண்டே வாழ்வின் உணர்ச்சிகளை வேறாகப் பிரித்து நடித்து அழகு பார்க்கும் இந்தப் புதிய விருப்பத்தால் மனிதனுக்குச் சில வசதிகள் கிடைத்தன. துன்பப்படுகிறவன் இன்பத்தின் சிகரத்தை நடிக்கவும், காணவும் முடிந்தது. மாறுபட்ட உணர்ச்சி நளினங்களை வேறுபட்ட மனிதர்கள் ஓரிடத்தில் ஓர் அரங்கில் ஒருசேரக் காண முடிந்தது. இதனால் வாழ்க்கை என்றும், வாழ்க்கையிலிருந்து பிறந்த கலை என்றும் இரு பிரிவு ஏற்பட்டது.

உணர்ச்சிகளோடு போராடுவது வாழ்க்கை. உணர்ச்சி களோடு விளையாடுவது கலை. வாழ்க்கைக்குப் பயன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/78&oldid=621423" இலிருந்து மீள்விக்கப்பட்டது