பக்கம்:மொழியின் வழியே.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 81

மக்களின் ஆதரவும், கலைஞர்களின் திடநம்பிக்கையும் இருந்தால் நாடகம் புனிதமான கலையாக வளர்ந்துவிட முடியும்.

நாடகம் எழுதுபவர்களும், நடிப்பவர்களும் கம்பெனி நடத்துபவர்களும், ஐயோ! பொருட் காட்சிகளும், கோவில் திருவிழாக்களும் அழைக்காவிட்டால் பிழைக்க முடியாதே' என்று அஞ்சாமல் தினசரி நடித்து வளம் பெற்று வாழ்வதற்கு ஏற்ற தனி நாடக அரங்குகள் தமிழ் நாட்டின் பெரிய நகரங்களிலெல்லாம் வந்துவிட்டால் கலை வளரத் தடையே இல்லை. நாடகம் உயிரோட்டமுள்ள கலை பல்லாயிரங் காலத்துப் பயிர். அது நலிந்தால் சத்தியமே நலிந்த மாதிரித் தான். சத்தியத்தைப் போல இருப்பது நலியலாம். சத்தியம் நலியக் கூடாது. நலியவிடக் கூடாது! 口

மொ - 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/83&oldid=621427" இலிருந்து மீள்விக்கப்பட்டது