பக்கம்:மொழியின் வழியே.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 மொழியின் வழியே!

தவற விட்டுவிட்டுக் காருக்குள் ஏறியபின் டிக்கெட்டுக்குப் பணமின்றித் தவிக்கும் பிரயாணியைப் போல் இன்றைய வளர்ச்சியின் வேகத்தில் உங்களுக்கிருக்கும் பொறுப்பைத் தவற விட்டுவிடாதீர்கள். பின்னால் வருத்தமடைய நேரிடும்.

ஒவ்வொரு கலைக்கும் அந்தக் கலையை ஏற்றிருக்கும் கலைஞனுக்கும் அதனதன் நிலைக்கேற்ப ஒரு பொறுப்பு உண்டு. அந்தப் பொறுப்பைப் புறக்கணித்தால் நிலைக்க இயலாது. புதுமைப்பித்தனும், கு.ப.ராவும், அடிப்படையிட்டுப் படைத்த தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தை வளப்படுத்தும் தூய முயற்சிகளைச் செய்யுங்கள். தமிழ் மரபும், தமிழ்ப் பண்பும், தமிழ் மக்கள் இனமும், என்றும் எதற்காகவும் பொறுப்பின்மைக்குத் தொடர்ந்து ஆதரவளித்தது இல்லை. இதை நீங்கள் நன்றாக நினைவு வைத்துக்கொள்ள வேண்டும். கரையில்லாமல், துறையில்லாமல் தன்போக்கில் ஒடும் ஆறு ஆக்கத்துக்குப் பயன்படுமா? கரைக்கு அடங்கித் துறைக்கு நிறைந்து ஓடுவதுதான் ஆறு. பொறுப்பு என்பது இதுதான். சிறு கதைகளுக்குத் தமிழ் மக்கள் மத்தியில் இப்போதிருக்கும் ஆதரவைத் தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

இன்றைய நாளில் சமூகத்துக்கு எத்தனையோ உண்மைகளை எளிய முறையில் புரியவைக்கும் பொறுப்பு உங்களுக்கு இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள். இதனால் சிறு கதைகளை வெறும் பிரச்சாரம் செய்யும் கருவிகள் என்று நான் சொல்வதாக நினைக்கக்கூடாது. தெளிவாக ஆராய்ந்தால் குறிக்கோள் இல்லாமல் வெறும் பொழுதைக் கழிப்பதற்கென்று எந்த ஒரு கலையும் உலகில் ஏற்படவில்லை. சிறுகதை இலக்கியம் உண்மையை நிறுவுவதற்காகப் புனைந்து காட்டப் luGlub 9G5 6urtu (Short story is a fie to create a truth). g)țăgită பூட்டுக்கு இந்தச்சாவியைத்தான் பயன்படுத்த வேண்டுமென்பது போல் உண்மையைப் பரப்புதற்காகத்தான் சிறு கதை என்ற பொய்யைப் பயன்படுத்த வேண்டும். இது உங்கள் பொறுப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/88&oldid=621432" இலிருந்து மீள்விக்கப்பட்டது