பக்கம்:மொழியின் வழியே.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 87

வாசகர் பொறுப்பு

தமிழ் வாசகர்கள் முன்னைப்போல் இல்லை. உணர்ந்து, தெளிந்து எதையும் எடைபோட்டுச் சொல்லும் பொறுப்பு வாசகர்களுக்கும் சிறிது சிறிதாக ஏற்பட்டு வருகிறது. 'தரமுள்ளது இது தரமில்லாதது இது என்று பிரித்துப் பார்க்கும் அறிவு தமிழ் வாசகர்களுக்கு முழு அளவில் ஏற்பட்டு விட்டால் கவலை இல்லை.

படிக்கிறவர்கள் விழிப்படைந்திருக்கிறார்கள் என்று தெரிந்தாலே எழுதுகிறவர்களுக்கு அது ஒரு முன்னெச்சரிக்கை மாதிரி. சிறு கதைகளில் என்ன பயனை மக்கள் எதிர் பார்க்கிறார்கள் என்பது எழுதுகிறவர்களுக்குப் புரிந்துவிடும். படிக்கிறவர்கள் எல்லோரும் சிறு கதை எழுதும் ஆற்றல் உள்ளவர்களாக மாறிவிடுவதற்கு முடியாது. சிறு கதைகளை எழுதும் ஆற்றல் கருவிலே வாய்க்கப்பெற்ற திரு. ஆனால், பெறுவதற்கரிய அந்தத் திரு தவறான வழியில் பயன்பட்டு விடாமல் நேரிய வழியில் செலுத்திக்கொண்டு போகும் பொறுப்பு உயர்தர வாசகர்களின் கையில் இருக்கிறது.

தமிழ்ச் சிறுகதைகள் உலக இலக்கியத்தில் மிகச் சிறந்த இடத்தைப் பெறப் போகும் காலம் தொலைவில் இல்லை. உண்மையுணரும் திறனுள்ள வாசகர்களே நிலைத்து நிற்கும் இலக்கியத் தரமுள்ள சிறு கதைகளை எழுத ஆர்வமுள்ள எழுத்தாளர்களே இந்தப் பொற்காலத்தில் தமிழில் வரும் சிறு கதைகளை, 'இது ஒரு நல்ல சிறுகதை' - என்று பிற மொழியினரும், தாய் மொழி வாசகரும் பாராட்டத்தக்க விதத்தில் உருவாக்குங்கள். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். இதைச் செய்வதில் அவ்வளவாகத் துன்ப மில்லையே? 口

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/89&oldid=621433" இலிருந்து மீள்விக்கப்பட்டது