பக்கம்:மொழியின் வழியே.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.மொழியும் பண்பாடும்

விளை பொருள்களின் வளமும் செழிப்பும் அவை பயிராகி முதிரும் புலங்களின் வளத்தையும் உரத்தையும் பொறுத்தனவாதல்போல மொழியின் தூய்மையும் பண்பாடும் அது வழங்கும் நிலத்தையும் பேசும் மக்களையும் பொறுத்தே முடிவு செய்வதற்குரியனவாக இருக்கின்றன. திராவிட மொழி இனங்களுள், பண்பாட்டிலும் தூய்மையிலும் நிகரற்ற முதன்மை தமிழ் மொழி ஒன்றற்கே உண்டு என்று முடிவு செய்த கிரியர்ஸனும் கால்டு வெல்லும்’ இதே அடிப்படையில்தான் தத்தம் மொழி ஆராய்ச்சியில் மெய்யுணர்ந்து வெளியிட்டிருக்கிறார்கள். > . -

மொழி ஆராய்ச்சி என்பது ஆழ்கடலின் அடிப்பகுதியில் முத்துக் குளிப்பதைப் போன்ற செயல். சிப்பியைக் கரைக்குக் கொணர்ந்தபின், விளைந்த நல்முத்தும் கிடைக்கலாம். வெறும் சிப்பியாகவும் போகலாம். எவ்வாறு இருப்பினும் செயல் அருமைப்பாடு உடையதே. ஒரு மொழிக்குப் பண்பாடு எவற்றால் ஏற்படும்? தூய்மை எவற்றால் ஏற்படும்? வழங்குகின்ற நாட்டையும், அதில் வாழும் மக்களையும், பொறுத்தது என்பது தொகுதியான விடை. அந்த விடையை விவரித்தாலொழிய இந்தப் புதிர் விடுபடாது. வேறொரு விதமாக நோக்கினால் தூய்மையும் பண்பாட்டினுள் அடங்கி விடக் காணலாம். ஆனால், ஒருமை முடிப்பினுள்ளும் பின்ன வகையாலே பன்மை கோடல் பொருந்துமாறுபோல இவற்றையும் இரண்டாகக் கொண்டு ஆராய்தல் பிழையன்று.

மரபும், இலக்கணமும், தூய்மைக்கும்; வழக்கும் இலக்கியமும் பண்பாட்டிற்கும் காரணமாக நின்று, பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் தகுதியைப் பெறுகின்றன. வழக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/9&oldid=621354" இலிருந்து மீள்விக்கப்பட்டது