பக்கம்:மொழியின் வழியே.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 மொழியின் வழியே!

கொண்டு இடையே கிடைக்கும் சிறுசிறு ஒய்வு நேரங்களில் எழுதி வருகின்றனர். தொடர்ந்து ஒரு நாவலையோ, நெடுங் கதையையோ, எழுத அவகாசம் குறைவு. ஒரு வாரப் பத்திரிகையோ, அல்லது மாத இதழோ, வாரா வாரமோ, மாதா மாதமோ வற்புறுத்தி ஒரு நீள் கதையை எழுதி வாங்கினால் தான் அவர்கள் தங்கள் தொழிலுக்கு நடுவே ஒரு பெரிய நாவலைப் படைக்க முடிகிறது.

இந்தச் சூழ்நிலை மாறி நேரமிகுதியும், சுதந்திரமான இயல்பும், ஆரஅமரச் சிந்திக்கும் திறன் மிகுதியும் உள்ளவர்கள் எழுத முன்வந்தால் வங்க மொழியையும், மற்ற வட இந்திய மொழிகளையும் மிஞ்சி விடுகிற அளவுக்குத் தமிழ் நாவல் இலக்கியம் வளர்ந்துவிடும்.

இரண்டாவதாக இன்னும் ஒரு காரணம் சொல்லலாம். நல்ல நாவல்கள் வளர்வதற்கும், வளராமலிருப்பதற்கும், படிக்கின்ற வாசகர்களும் ஒருவகையில் காரணமாகிறார்கள்.

சானைபிடிக்கிற கல் கத்திக்குக் கூர்மையைக் கொடுத்ததா? அல்லது கத்தி கல்லிலிருந்து கூர்மையைத் தானாகவே வலியப் பெற்றுக் கொண்டதா? என்றால் கத்தியும் சாணைக் கல்லும் சேரும் போது ஏற்படுகின்ற புதிய பண்புதான் கூர்மை என்பது. நல்ல இலக்கியத்திற்கு உரைகல் நல்ல வாசகர்கள்தாம். எழுத்தாளனின் தகுதியையோ, தகுதியில்லாமையையோ விருப்பு வெறுப்பின்றிக் கண்டு தரமுள்ள இலக்கியத்தைத் தான் மதிக்கலாம் என்ற கட்டுப்பாடும் நேர்மையும் வாசகர் களிடையே ஏற்பட்டுவிட்டால் போதும்; பின்பு எழுது கிறவனின் தரம் தானாகவே உயரும். இலட்சிய எழுத்தாளர் போலவே இலட்சிய வாசகர்களும் வளர வேண்டும்.

வாசகர்களுக்கும், நாவலாசிரியர்களுக்கும் நடுவே இப்படி ஒரு இலக்கியச் சூழ்நிலை உருவானால் வளர்ச்சியைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/92&oldid=621436" இலிருந்து மீள்விக்கப்பட்டது