பக்கம்:மொழியின் வழியே.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 மொழியின் வழியே!

இன்றைய நிலை

இன்றைய நிலை என்ன? - என்பதைக் குறிப்பிட்டுத் தெளிவாகச் சொல்லப்புகுந்து விட்டால் சிலருடைய பாராட்டுக்கும், பலருடைய தாக்குதலுக்கும், ஆளாக நேரிடும். ஆனாலும் உண்மையை மறைத்துக்கொண்டு எழுதுவதிலும் பயனில்லை. எழுத்தையோ எழுதியவர்களையோ, இன்னார் அல்லது இன்னதென்று பெயர் குறிப்பிட்டுச் சொல்லுவதோ பாராட்டுவதோ வேற்றுமையையும், பூசலையும் வளர்ப் பதற்குத் தான் பயன்படுகிறது. அதுபவரீதியாகக் கண்ட உண்மையாகும் இது.

அலை ஒயட்டும் என்று காத்திருந்து கடலில் நீராட முடியாது. ஆகவே பயமோ, விருப்பு, வெறுப்போ, இல்லாமல் எடை போட்டுச் சொல்லவேண்டிய அவசியத் தையும் தவிர்ப்பதற்கில்லை. அவசியம் ஏற்பட்டால் கூடப் பொய்யைச் சொல்வது தவறு என்ற நிலை மாறி, அவசியம் ஏற்பட்டால்கூட உண்மையைச் சொல்வது தவறு என்று எண்ணிவருகிறார்கள் இந்நாளைய விமர்சகர்களில் சிலர். அந்த நிலையை மாற்ற நாம்தான் துணியவேண்டும்.

வாசகர்கள் இதற்காக எந்த நிலையில் துணிய முடியும்? நல்ல நாவல்களைக் கூசாமல் நல்ல நாவல்களென்று பாராட்டுங்கள். அதை எழுதிய - எழுதுகிற ஆசிரியனுக்கு ஊக்கமளியுங்கள். ஒரு பயனையும் விளைவிக்க முடியாத ஒன்றுக்கும் உதவாத நாவல்களை அது பெரிய பத்திரி கைகளில் வெளிவருகிறதென்பதற்காகவோ, அதை எழுதிய ஆசிரியரின் தயவு பெருமை - முதலியவற்றுக்குப் பயந்தோ பாராட்டாதீர்கள். பத்திரிகைகளில் வெளிவராமலே டாக்டர் மு.வ. வின் இலக்கியத் தரமுள்ள நாவல்கள் விற்பனை யாவதைப் பார்த்தாவது உண்மைக்கு உண்மை உழைப்புக்கு - நாட்டில் மதிப்பு உண்டென்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/98&oldid=621442" இலிருந்து மீள்விக்கப்பட்டது