பக்கம்:மொழியைப் பற்றி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின்

யும் கண்டு வியந்தேன். தொடக்கப் பள்ளி யிலிருந்து பல்கலைப் படிப்பு வரை அவரவர் தாய் மொழியில் கற்றுயர்ந்த மக்களையும் - நம் நாட்டின் நிலைமையையும் நினைத்து வெட்கிப் போனேன்.

உருசிய மொழி பேசும் மக்கள் பெரும் பான்மையாக இருந்தாலும் உருசிய மொழித் திணிப்பு எந்த ஒரு தேசிய இனத்தின் மீதும் இல்லாமையைக் கண்டு வியந்தேன். அதனினும் வியப்பு அறுபதுக்கு மேற்பட்ட எழுத்து வடிவ மற்ற பேச்சு மொழிக்கு இலெனின் முன்னிருந்து அம் மொழிகட்கு எழுத்து வடிவம் தரச் செய்து இன்று அம் மொழியின் பல துறை ஆக்கங்கள் உலகரங்கில் தலை நிமிரவைத்த பெருமையாகும்.

மொழியைத் துல்லியமாய்க் கையாள்வது, தூய்மையுடன் கையாள்வது இலெனினின் தலை யாய கடமையாய் அமைந்திருந்தது. இன்றும் மேலைய ஐரோப்பிய மொழிகளிலேயே கலப் பற்ற மாசற்ற மொழி உருசிய மொழியாகும். அந்த நாட்டின் மொழிக் கொள்கைக்கென ஓர் இலெனினே போதுமானதாயிருந்தது. ஆனால் தமிழகத்தில் அருபெரும் கல்வியாளர்களும், சீர்திருத்தச் செம்மல்களும் தோன்றியும் கொடுந் தமிழும் கலவைத் தமிழுமே அனைத்துத் துறையி லும் மேலோங்கி நிற்கின்றன.

இதனினும் கேடு, ஆங்கில மொழியின் மீது கொண்டுள்ள வெறியுணர்வு பாட மொழியாக இந்தியத் தமிழகத்தில் பேயாட்சி செய்கிறது. சாதியால் மதத்தால் தமிழ் மக்கள் சிதைந்தது போல் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்றவர்கள் எல்லா நிலையிலும் மேம்பாடு எய்தவும், தாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/11&oldid=713808" இலிருந்து மீள்விக்கப்பட்டது