பக்கம்:மொழியைப் பற்றி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுரை

உலகின் ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு வகையில் சிறப்புடையது. பற்பல சிறப்புகளை யும் ஒருங்கே கொண்ட ஒரு சில மொழிகளில் தமிழ் முதன்மையானது. அனைத்து ஆற்றலை யும் கொண்ட மொழி மட்டுமன்று; கொள்ளும் மொழியும் ஆகும்.

தொல் பழங்கால முதல் அறிவின், ஊடக மாகிக் காலந்தோறும் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டு, சமுதாயத்தின் விரைவான முன்னேற்றத் திற்கு வழிகாட்டி, வளங்கூட்டிய தமிழ் மொழி, உலக மொழிகட்கெல்லாம் மூல மொழியாகவும் இந்திய மொழிகட்குத் தாய் மொழியாகவும் விளங்குவது.

மற்ற மொழிகளுடன் ஒப்பிடும்போது தமிழ் மொழி தனித் தன்மையுடன் சிறந்து செழித்து விளங்குவது. ஆனால், அதனை அழிக்கவும் ஒழிக்கவும் எழுத்தாளர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர்களும், எல்லாம் வலலவராக அரசதிகாரத்திலே ஏறியவர்களும் தம்தம் முயற்சி களை அறிந்தும் அறியாமையாலும் செய்து வருகின்றனர்.

ஆக்கப்பணி செய்யத் தெரியாதவர்களிடம் கருவி கிடைத்தால், கருவியையும் பாழ்செய்து கண்டதையும் பாழ் செய்வதைப் போல இன்று மொழி இருவகைக் கொடுங்கோலர்களால் இடர் படுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/14&oldid=713811" இலிருந்து மீள்விக்கப்பட்டது