பக்கம்:மொழியைப் பற்றி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

மொழியைப் பற்றி.

இன்று சோவியத்து மக்களாக உயர்ந்துள்ளனர். உருசிய மொழியே இலெனினின் மொழி என்னும் மொழி உயர்வு நவிற்சியன்று.

உருசிய மொழியின் உயர்வுக்கும் வளத் திற்கும் செம்மைக்கும் செழுமைக்கும் உழைத்த இலெனின், ஒலியால் மட்டும் உயிர் வாழ்ந்து கொண்டிருந்த சோவியத்தின் பற்பல மொழிகட்கு உருவடிவம் தந்து, வாயும் செவியும் மட்டுமே இருந்தவர்கட்குக் கண்ணையும் தந்து கருத் துரற்றை மலையூற்றாய்ப் பெருக்கெடுக்கச் செய்தார். அதற்காக எந்த ஒரு மொழியினர் மீதும் தம் தாய் மொழியாகிய உருசிய மொழியைத் திணிக்கவில்லை - திணிக்கவிடவும் இல்லை.

இன்றும், உருசிய சோவியத்துச் சமன்மைக் கூட்டுக் குடியரசு நிலப்பரப்பைத் தவிர, மற்ற இருபது தன்னாட்சிக் குடியரசுகளிலும், எட்டுத் தன்னாட்சிப் பகுதியிலும், பத்துத் தன்னாட்சிப் புற எல்லையிலும் அந்தந்த மாநில மொழிகளே கல்வி மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் சிறக் கின்றன. -

உலகின் மாபெரும் பொதுமை வல்லரசான சோவியத்தில் ஒவ்வோர் இனமக்களின் மொழிய்ை யும் பண்பாட்டையும் நாகரிகத்தையும் தனித் தனிச் சிறப்புடன் ஒரு காவனத்தில் பல்வேறு மண மலர்களையும் கனி மரங்களையும் வளர்ப் பதைப்போல் வளர்க்கின்றனர்.

சோவியத்து நாட்டுடன் நட்புறவு கொண்டு சென்று திரும்பும் எழுத்தாளர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை இந்த உண்மையை அறிந்து வந்ததற்கான சான்று ஒரு கடுகளவும் இங்கே காண முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/16&oldid=713813" இலிருந்து மீள்விக்கப்பட்டது