பக்கம்:மொழியைப் பற்றி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காற்றை விதைத்துப் புயலை அறுக்காதீர்

பாவேந்தர்

எங்களின் வாழ்வும் எங்களின் வளமும் எங்கள் தாய்மொழி இன்தமிழ்ச் செல்வமே! தமிழ் எங்கள்.உயிர், தமிழ் எங்கள்உடல் தமிழ் வாழ்வதனால் யாம் வாழ்கின்றோம்! தமிழ் எம் உணர்வு தமிழ் எம் உணர்ச்சி ! உண்ணும் உணவும் பருகும் நீரும் தமிழே தமிழே, சாவா மருந்து ! தேனின் இனிமை செழுமலரின் மணம் ! தமிழ்தான்் எங்களின் கூர்வாள், எங்களின் கேடயம், எஃகில் காணா வலிமையின் இருப்பு ! நீரின் தெளிவு ! நெருப்பின் சுடர்தி ! காலப் பழமையால் வைரம் பாய்ந்தது ! நாகரிகத்தின் நாற்றங் காலது ! எம்மொழிக்கும் அது ஈடிணையற்ற செம்மொழி : உலகச் சிந்தனைக்கெல்லாம் ஊற்றாய்த் துலங்கும் உண்மையின் பைஞ்சுனை ! அதனில் இந்தி நஞ்சைக் கலப்பது

பொதுமை நோக்கிப் புதுமைக்கேகும் மக்களை மாய்க்கும் மடச்செயல் ஆகும். சிக்கல் நெருப்பில் எண்ணெய்யைச் சேர்ப்பதா? தீமையின் விளைவு தீமையே, காற்றை விதைத்துப் புயல்அறுக்காதீர் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/18&oldid=713815" இலிருந்து மீள்விக்கப்பட்டது