பக்கம்:மொழியைப் பற்றி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மொழியைப் பற்றி.

எழுதப் படிக்க நான்கு எழுத்துகள் தெரிந்தால் போதும் என்று கூறும் பெற்ருேர்கள் ! பள்ளியில் பத்துப் பாடங்கள் படித்து விட்டதாலேயே தம்மைப் படிப்பாளியாகக் கருதிக்கொள்ளும் இளைஞர்கள் ! வேலையில் சேர்ந்து விட்டால் எதையும் ஏன் படிக்க வேண்டும் என்று வினவும் பேராசிரியர்கள் ! உண்பதும், உறங்குவதும், பொருள் சேர்த்து வாழ்வதே பொதுத் தொண்டு என்று நினைப்பவர்கள் ! இப்படிப் பலவகையான மனிதர்களைப் பார்க்கும் நாம், சார் மன்னனை எதிர்த்துப் பரந்த உருசிய நாட்டில், புரட்சிக்குத் தலைமை ஏற்ற இலெனினுக்குப் பல மொழிகளைக் கற்கவும், உலக அறிவைக் கொள்முதல் செய்து கொள்ளவும் எப்படி முடிந்தது என்று நினைக்கும் போது எவருக்குமே வியப்பு ஏற்படாமல் இருக்க முடியாது. உருசிய மொழி ஒரு சிறந்த இலக்கிய மொழியாக வளர்ச்சிப் பெற்றதற்கு இலெனின் எழுத்துகளும் ஓர் அடிப்படையாகும். 19ஆம் நூற்ருண்டின் தொடக்க காலத்தில் உருசிய மொழியை இலெனின் விளம்பரத்திற்கும், கொள்கைப் பரப்பிற்கும் பயன்படுத்தினார். அந்த மொழியிலேயே அறிவியல் பொது உடைமைக் கோட்பாடுகளையும், அரசியல் பொருளாதாரக் கோட்பாடுகளையும், மனித வாழ்வைப் பற்றிய சிக்கல்களையும் தெளிவாக எடுத்துக் கூறினார். - இதற்குரிய காரணம், இலெனின் ஆசிய மொழிகளையும், ஐரோப்பிய மொழிகளையும் நன்கு ஆய்ந்து அறிந்ததேயாகும், மேலும் அவர் பள்ளி மாணவனாக இருந்தபோதே பாடங்களில் மிகு அக்கறை செலுத்துவதைவிட, மொழியைப் பற்றி அதிக அக்கறை கொண்டிருந்தார் என்று அவரின் தங்கை திருவாட்டி அன்னா கூறி இருப்பதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். - மேடைப் பேச்சுக்கும், கொள்கைப்பரப்பிற்கும் ஏற்ற முறையில் மொழி அமைய வேண்டும் என்று இலெனின் விரும்பினார். வெற்றாரவாரச் சொற்களில் அவருக்கு வெறுப்பு. காரணம் அதனால் உருப்படியான பலன் ஏற்படாது என்று கருதினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/20&oldid=713817" இலிருந்து மீள்விக்கப்பட்டது