பக்கம்:மொழியைப் பற்றி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

ஸ்ால்பிய உஸ்பெகிஸ்தான்்

(13. 1915)

முடிவற்று அலைந்திடும் உள்ளம்

நிலத்துாடும், கடலூடும், வானுாடும் பயணங்கள்

நிகழ்த்து கின்றேன்;

பலவான சிற்றுார்கள், நகரங்கள், நாடெல்லர்ம்

பறந்தும் உள்ளேன்;

நிலவுலகம் பலவண்ணத் திண்டாகப் புதிர்வழியாய்க்

கிடக்கும், எங்கும்

கலத்துறைகள் வாழ்மனைகள், எண்ணங்கள், கனவார்வம்

பொலிந்து நிற்கும்.

எங்கெங்கு நான்செலினும் கனவோடே உடன்கொள்வேன்

பாட்டை, அன்பை .

இங்கிந்த உலகந்தான்் ஒய்வில்லாது இயங்குதல்போல்

இயங்கு கின்றேன். -

கங்குல்துயில் கனவினிலும் என்பயணம் மேன்மேலும்

தொடர்ந்தே செல்லும்,

செங்கதிர்ப்புத் தொளிநோக்கிச் செல்கின்ற நாவாய்என்

படுக்கை ஆகும்.

252

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/21&oldid=713818" இலிருந்து மீள்விக்கப்பட்டது