பக்கம்:மொழியைப் பற்றி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மொழியைப் பற்றி...

மொழிச் சொற்களஞ்சியம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற் காகப் பலரை ஊக்குவித்துத் தாமே அதில் முழு அக்கறை காட்டி ஒரு நல்ல சொற்களஞ்சியம் வெளிவரக் காரணமாக இருந்தார் இலெனின். மொழியின் ஆற்றலைக் கொண்டு கிளர்ச்சிகளுக்கும், கொள்கைப்பரப்பிற்கும் முழு வலிமையை உண்டாக்கியவர் இலெனின். கட்டுரைகளிலும், வெளிவரும் ஏடுகளிலும், நூல்களிலும், அறிக்கைகளிலும் ஒரு சிறு இலக்கணப் பிழைகூட ஏற்படக் கூடாது என்பதில் இலெனின் தீவிரமாக ஈடுபட்டார். தம் முடைய பேச்சிலும், எழுத்திலும் எந்தக் குற்றம் குறையே இல்லாத அளவிற்குத் தாமே முன் எச்சரிக்கையுடன், பிறருக்கு நல்ல எடுத்துக்காட்டாய் விளங்கினார். மேடை மீது பலர் முன் நின்று பேசுபவர்களுக்குத் தாம் விரும்பும் குணங்கள், அதற்கான திறமையும் தகுதியும் எந்த அளவிற்கு இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து, மொழி அறிவு நிரம்பியவர்களையே இலெனின் தேர்ந்தெடுத்தார். அவர் உண்மையான மக்களின் தலைவராகத் திகழ அவரது பேச்சாற்றல் துணைபுரிந்தது. அதுமட்டுமல்ல, சமுதாயத்தைப் புரட்சிப் பாதைக்குச் செம்மைப்படுத்த வளமான மொழி அறி வும்,கருத்தாற்றலும், பேச்சாற்றலும் அவருக்குத் தேவைக்கு மேலாக இருந்த காரணத்தினால் மக்களைத் தட்டி எழுப்பிவிட அவரால் முடிந்தது. இதற்கு முன், வேறு எவரும் அந்த அளவிற்குச் செயல் புரிந்ததாக வரலாறு இல்லை. அவை யகத்து அஞ்சாத சொல் திறமையில் அவர் வல்லவர். எதிரி களை எளிதில் வெல்லக்கூடிய அளவிற்கு அவரின் மொழி - நடை அமைந்திருந்தது. பேசியதையே மீண்டும் மீண்டும் பேசுவதை அவர் வெறுத்தார். ஒரே நடையில் எதையும் பேச வும் அவர் முற்பட்டதில்லை. எதை எப்படி எவ்வாறு கூறினால், கேட்பவர் மனத்தில் பதியும் என்பதை உணர்ந்து பேசிய மிகச் சிறந்த புரட்சிப் பேச்சாளர் இலெனின். அசைக்க முடியாத அளவிற்கு, வரம்புக்கு மீறிய அதிகார வன்மை பெற்றவர்களை அசைத்து, ஆட்டம் கொள்ளச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/22&oldid=713819" இலிருந்து மீள்விக்கப்பட்டது