பக்கம்:மொழியைப் பற்றி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மொழியைப் பற்றி ...

சிந்தனைக்கும் மேலானது ' என்று தையட்சன் கூறு கிறார். ஒன்றை நேரில் கண்டால்தான்் சிந்திக்க முடியும் - காணாத தைச் சிந்திக்க இயலாது என்பதையும் . உலகில் உண்மையாக இருப்பவற்றைப் பற்றிதான்் மனிதன் சிந்திக்க முடியும் என்பதையும் இலெனின் எழுதிய உலகியம் நூலில் தெளிவாக்கி யிருக்கிறார்.

ஒரு பொருள் மறைகிறது, காண முடியாததாகிறது, என்றால், அந்தப் பொருளை இதுவரை நாம் சிந்தித்து வந்த நிலைக்கு வரையறை ஏற்பட்டு விட்டது என்று பொருள். ஆனால், நாம் மேலும் அந்தப் பொருளைப் பற்றி ஆழமாகச் சிந்திக்கவும், அதன் குணங்களை ஆராயவும் முற்படுகிறோம் என்பதுதான்் உண்மை. ஒரு காலத்தில் கண் எதிரில் காணப் பட்டதும், மாற்றம் கொள்ளாத நிலையில் இருந்ததும், இப்போது மறைந்துவிட்டதற்கான காரணங்களைக் கண்டறி யும்போது, அந்தப் பொருள் எத்தன்மை வாய்ந்தது என்பதை அறிந்து பல உண்மைகளை நாம் அறிந்துகொள்கிறோம். அந்த அறிவைக்கொண்டு மேலும் பல புதுப் பொருள்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இதே அடிப்படையில் ஆராயும் போது மெய்பொருள் உண்மைகள் எல்லாம் மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டே இருக்கும் நிலையைக் காண்கிறோம்' இப்படி இலெனின் பொருள்களுக்கு அழியும் தன்மையும், மறையும் தன்மையும் உள்ளதைத் தெளிவாக்குகிறார். சிந்திக்கும் ஆற்றலுக்கு உரிய தனித்தன்மையையும் கூறி இருக்கிறார்.

ஒரு குவளை, வெறும் கண்ணாடி உருளை மட்டுமில்லல. அது தண்ணிர் குடிக்கும் ஏனமும் கூட. அந்தக் குவளை வேறு வகையிலும் பயன்படும். ஒரு குவளை என்பது நிறைபொருள் அதனைத் தாக்குவதற்கும் ஏவலாம். அதனை மேசை மீதுள்ள தாள்கள் நகராமல் இருக்கவும் பயன்படுத்தலாம். பட்டாம் பூச்சியைப் பிடித்து வைக்கவும் பயன்படுத்தலாம். அதன் மீது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/26&oldid=713823" இலிருந்து மீள்விக்கப்பட்டது