பக்கம்:மொழியைப் பற்றி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின் 25.

கைத்திறன் மூலம் வடிவம் செதுக்கப்பட்டோ, வரையப்பட்டோ இருக்கும் ஓவியங்களுக்காகவும் பாதுகாக்கப்பட வேண்டிய தாகவும் இருக்கக்கூடும். இதெல்லாம் அந்தக் குவளையைத் தண்ணிர் குடிக்கலாமா கூடாதா என்று முடிவு செய்வதற்காக அல்ல. எனக்கு இப்பொழுது தண்ணிர் குடிக்க ஒரு குவளை வேண்டும் என்றால் அது கண்ணாடியால் செய்யப்பட்டதா, உருளையாக இருக்கிறதா, பூ வேலை செய்யப்பட்டிருக்கிறதா என்பதில்லை. அந்தக் குவளையின் அடிப்பக்கத்தில் ஒட்டை இருக்கிறதா, அதனைப் பயன்படுத்தும்போது உதடுகளுக்குச் சிராய்ப்பு ஏற்படுமா என்பதைத்தான்் கவனிப்பேன். தண்ணீர் குடிப்பதற்காக இல்லை என்றால், குவளை எப்படியிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. பள்ளிகளில் பயிலும் போது கற்பிக்கப்படும் பொருள்கள் எவரும் புரிந்து கொள்ள மட்டுமே கூறப்படுகின்றன. ஆனல் பலவேறு பொருள் விளக்கங்களை அறியும் போது, அவை அந்தப் பொருளின் வகை வகையான பண்புகளைக் காட்டுவனவாக அமைகின்றன. குறிப்பிட்ட வட்டாரத்தில் வழங்கப்படும் மொழியில் பொருள் களின் விளக்கத்தோடு நிற்காமல், மேலும் உள்ள வகை வகை யான பொருள் விளக்கங்களையும் ஆராய்வதன் மூலமே அந்தப் பொருளைப்பற்றி முழுமையான தெளிந்த அறிவைப் பெற்றிட முடியும். எது சரி, எது உண்மை என்பதைக் கண்டறிய, நாம் மேலும் தீவிரமாக ஆராய வேண்டும். அதற்கு முதலில் நாம் அந்தப் பொருளுக்கு வட்டார மொழிகளில் வழங்கிவரும் பல்வேறு விளக்கங்களையும், அந்தப் பொருளின் பண்புகளையும், அந்தப் பொருளுக்கு உரிய உறவுகளையும், அந்தப் பொருளின் பயன் களையும் நாம் கண்டறிய வேண்டும். இது எளிய பணியன்று, நாம் இதை முழுமையாகச் செய்திட இயலாது போகலாம். இருப்பினும் விரிவாக, விளக்கமாகப் பலவற்றை ஆராய்ந்து தெரிந்து கொள்வதன் மூலம் தவறுகளை நேரிடாமல் தடுத்துக் கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/27&oldid=713824" இலிருந்து மீள்விக்கப்பட்டது