பக்கம்:மொழியைப் பற்றி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மொழியைப் பற்றி.

இரண்டாவதாக அந்தக் குறிப்பிட்ட பொருளின் மாற்றங்க ளையும், வளர்ச்சியையும், இயங்கும் தன்மையையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதனை நாம் உடனே கண்டு பிடித்து விட முடியாது. காலப்போக்கில் தான்் அதனை அறிய முடியும். அந்தப் பொருள் ஏன் கண்டு பிடிக்கப்பட்டது. அது எதற் கெல்லாம் பயன் படுத்தப் படுகிறது; வேறு எதனுடன் அது தொடர்பு கொண்டுள்ளது என்பதை அறிந்து கொள்வதுவும் இன்றியமையாதது., அதற்கு உலக அறிவு வேண்டும். மூன்றாவதாக அந்தப் பொருளுக்கான முழு விளக்கம்பெற மாந் தனின் பட்டறிவு பெருகி இருக்கவேண்டும். அப்போதுதான்் அந்தப் பொருளின் முழு உண்மை வெளிப்படும். அதிலிருந்து மக்களின் தேவைகளையும் அறியலாம். நான்காவத்ாக அறியவேண்டியது-இப்படி அந்தந்த மாநில மொழிகளில் உண்மைகளைக் கண்டறிவதன்மூலம் உணரும் உண்மை உறுதியானது. அது ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாததாகவோ, உறுதியற்றத்ாக்வோ இருக்க முடியாது.' என்று இலெனின் உண்மைகளை எப்படிக் கண்டறிவது என்பதை அறிவியல் அடிப்படையில் மொழியில் காணலாம் என்பதைக் குறிப்பிட்டிருக்கிருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/28&oldid=713825" இலிருந்து மீள்விக்கப்பட்டது