பக்கம்:மொழியைப் பற்றி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியும் வகுப்புப் போராட்டமும்

எந்த உண்மையையும் முழுமையாக ஆராய்ந்த பின்னரே நம்ப வேண்டும் என்பதையும் அறிவு வளர்ச்சிக்குக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைச் சீராகத், தெளிவாக வகுத்துத் தந்துள்ளார் இலெனின்.

தன்னுரிமை (சுவபோதா - உருசியாவிலிருந்து சுவட்சர் லாந்து நாட்டில் குடியேறியவர்களால் நடத்தப்பட்ட ஏடு) ஒரு பயனும் அற்ற கந்தல். அதன் ஆசிரியர் எழுதுவதைப் படிப்பவர் களுக்கு இந்த எண்ணம்தான்் ஏற்ப்டுகிறது. தொழிலாளரின் நலனுக்காக அந்த ஏடு வெளியிடப்படுவதாகவும், தான்் ஒருவனே முதல் பக்கத்தில் இருந்து கடை பக்கம் வரை எழுதுவ தாகவும் தொழிலாளர் பற்றித் தான்் நல்ல முறையில் விளம்பரப் படுத்துவதாகவும், அதன் ஆசிரியர் கூறிக் கொள்கிறார். ஆனால் நாம் இங்கே காண்பது என்ன? தொழிலாளர்களுக்கு நல்ல விள்ம்பரம் கிடைப்பதற்கு மாறாகத் தொழிலாளர்களை மிகவும் இழிவாகக் கருதும் நிலைதான்் ஏற்பட்டு வந்திருக் கிறது. F

எதையுமே ஒரே ஓர் ள்ளிய சொல்லில் புரிந்து கொள்ளக் கூடிய முறையில் எழுதுவதில்லை. உவமைகள் மிகுதியாகவும், கவர்ச்சிப்ான சொற்க்ள் மூலம் எழுதப்பட்டிருக்கின்றது. ந்ைந்த பழைய சமன்மைக் கருத்துகளை அரைத்த மாவையே அரைப்பதுபோல், மிகவும் அருவருப்பான மொழியில் எழுதி யிருக்கிறார். புத்தாய்வுகளும், புதிய எடுத்துக்காட்டுகளும் கொச்சையாக இருக்கின்றன. இதற்கும் முறையாக விளம்பரப் படுத்துவதற்கும் வெகு தொலைவு. அந்த ஆசிரியர் வாசகர் கவனத்திற்குப் பல்வேறு சிக்கல்களை எடுத்துவைத்து, ஏற்கனவே எல்லோரும் அறிந்த உண்மைகளை மேலும் ஆர்ாயத் தூண்டும் வகையில் தம் கருத்துகளை அமைத்திருக்கிறார். ஆனால், அவர் ஆய்வின் முடிவுகளை வாசகர்களே கண்டுகொள்ள விட்டுவிடுகிறார். அவர் சிந்திக்க இயலாதவர்களையோ, சிந்திக்க மறுப்பவர்கள் பற்றியோ கவலைப்படவில்லை. அப்படிப்பட்டவர்கள் கூட ஆராய்ச்சியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/29&oldid=713826" இலிருந்து மீள்விக்கப்பட்டது