பக்கம்:மொழியைப் பற்றி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின் 29

டிருக்கும் ஏழைப் பாட்டாளிகட்குப் பயன்படும் முறையில் வரலாற்றுக் குறிப்புகள் தொகுக்கப்படவேண்டும். போராட் டத்தை எப்படி வகுத்துக் கொள்ளலாம், என்னென்ன வழிமுறை களைக் கையாளலாம், எப்படி எல்லாம் செயல்பட்டால் செலவைக் குறைக்கலாம், எந்தப் பாதையைப் பின்பற்றினால் நிலையான நல்ல பலன் பெறலாம் என்பதை எழுத்தின் மூலம் வரலாற்றில் குறிக்கப்பட வேண்டும். புதிய தீப்பொறி (இசுகாரா) ஏட்டின் ஆசிரியர், கவர்ச்சியான முழக்கங்களை உருவாக்குவதில் வல்லவராகத் திகழ்ந்தார். புரட்சியை ஏற்படுத்துவோம் என்கிற பழைய முழக்கத்தை மாற்றிப், புரட்சி வெடிக்கும் என்றுரைத்தார். இவர்களின் திரிபு நிலை கடுமையான புரட்சிப் போராட்ட வாணர்களை அமைதிப் படுத்தவே கையாளப்படுகிறது. இதன் விளைவாகப் போராட்டம் உச்சநிலை அடையும்போது இந்த அமைதி முயற்சியில் ஈடுபடுபவர்கள் ஓடி மறைய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்படிப்பட்ட போராட்டம் முழு வெற்றியை அடையும்போது, இவர்கள் புற்றில் மறைந்த பாம்பு தலை நீட்டுவதுபோல வெளிவந்து வேலை நிறுத்தத்தை ஒ ஓ என்று பாராட்டிப் புகழ முற்படுகிறார்கள். அதே நேரத்தில் புரட்சி தோல்வியடைந்தால், இவர்களே, தோல்வி யடைந்தவர்களுக்கு அறிவுரை கூறவும், ஏராளமான பழி .களையும் சுமத்த முனைகிறார்கள்.' - என்று இலெனின் புரட்சி வெடித்த காலகட்டத்தில் பச்சோந் திகள் எப்படி இரட்டை வேடம் போடுகிறார்கள் என்பதையும், இந்தக் காலத்தில் ஒருவன் நாக்கை நீட்டிப்பேசத் தொடங்கி :னாலே போதும் புரட்சி வந்தேதீரும். அப்படி அந்த நாக்கு பேசுவதைக் கொண்டே பல கட்டுரை எழுதிவிடலாம். அந்தந்தக் காலங்கட்குத்தான்் முழக்கங்கள் தேவைப் படுகின்றன. அப்படிவரும் முழக்கங்கள் கூட வெறும் சொல் இரைச்சல்களாவே அமைகின்றன. உண்மைகள் பெரும்பாலும் ஒருவன் துணிந்து கட்டற்றுப் பேசுவதன் மூலமே வெளிப் படுகின்றன.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/31&oldid=713828" இலிருந்து மீள்விக்கப்பட்டது