பக்கம்:மொழியைப் பற்றி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின் $f.

சாரிகள் வன்முறையை எதிர்த்து, வலது சாரிகளின் சட்ட முரணான வன்முறையில் ஈடுபட வேண்டி இருக்கிறது. புரட்சிச் சொற்களுக்கு எப்படி எல்லாம் புதுப்புதுப் பொருளை இட்டுக் கட்டுகிறார்கள் என்பதையும் சிறப்பாக எடுத்துக் கூறி விளக்கி இருக்கிறார் இலெனின். வகுப்புப் போராட்டத்தின் வெற்றியில் அவர் எடுத்துக்கொண்ட - சிறப்புப் பங்கும், பொறுப்பும் எந்த அளவிற்கு அவர் அக்கறை யுடன் பொறுப்பேற்றார் என்பதும் இதிலிருந்து புலப்படுகிறது. பல மொழிகளைப் பல நாடுகளின் நடப்புகளை விரிவாகவும் விளக்கமாகவும் அவர் அறிந்திருந்த காரணத்தினால் பல்வேறு சொற்களுக்கும் உரிய பொருளை எவரும் வியக்கத்தக்க முறையில் அறிந்திருந்தார் இலெனின்.

ஒரு நேரத்தில் மார்க்சிய அ, ஆ, இ-க்களை எல்லாம் நாம் நிரும்பத்திரும்பக் கூறவும், வலியுறுத்தவும் வேண்டியிருந்தன. இப்போதும் இந்தத் தேவை ஏற்பட்டிருக்கிறது. 'நம்பிக்கை. மோசடி" என்பது இழிசொல் இல்லை. நம்பிக்கை மோசடி’ என்ற சொல் அறிவியல் நெறி, அறிவியல் முறையான சரியான சொல் ஆகும். இடை நிலை மக்கள், வணிகர்கள், ஆகியோரின் உள்ளக் கிடைக்கையை, அவர்களின் எண்ணங்களை, அவர்களைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நல்ல சரியான சொல்தான்் நம்பிக்கை மோசடி". அதிகாரவகுப்பு உடன்பாடு கொள்வதற்கு நம்பிக்கைக் கேடு என்று பொருள்படும்படி பயன்படுத்துவது சரியில்லை,' இப்படி இலெனின், அதிகார வகுப்பை எதிர்த்து இடைத்தட்டு: மக்கள், வணிகர்கள் போராடுவதை உயர்வாக எல்லோரும் கருதும் முறையில் தக்க நேரத்தில் இடித்துரைத்துச் சொற். களுக்கு உரிய உயர்ந்த பொருளை விளக்கி இருக்கிறார்.

சமன்மைக் குடியரசினர் தேர்தல் நேரத்தில் மேற்கொள்ளும் உடன்பாடுகளை, மக்கள் எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடிய முறையில் தெளிவான-விரிவான-எளிய சொற்களில் எடுத்துக் கூறவேண்டும். மக்களுக்கு விளங்காத முறையில் கடுமையான சொற்களைப் பயன்படுத்தக் கூடாது. தாய்மொழிச் சொற்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/33&oldid=713830" இலிருந்து மீள்விக்கப்பட்டது