பக்கம்:மொழியைப் பற்றி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மொழியைப் பற்றி.

தவிர வேற்றுமொழிச் சொற்களை முழக்கங்களுக்கோ, விளக்கங் களுக்கோ, முடிவுகளைத் தெளிவுபடுத்தவோ பயன்படுத்தக் கூடாது. அழகுக்காக அடுக்குமொழிகளையோ, மக்களுக்குப் பழக்கமில்லாத கடினமான இருபொருள் சொற்களையோ பயன் படுத்த வேண்டியதில்லை. உண்மைகளைப் புரியும்படி, புள்ளி விளக்கங்களோடு கூற வேண்டும். சமன்மைக் கொள்மையின் சிறப்பைப் பற்றியும், இன்றைய உருசிய புரட்சியைப் பற்றியும் மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வழிமுறைகளைக் கையாள வேண்டும். தேர்தல் நேரத்தை மக்களுக்கு அறிவு புகட்டும் முறையில், தாய் மொழியில் பயன்படுத்த வேண்டும். அயல்நாட்டு மொழி யையோ, மக்களுக்குப் புரியாத சொற்களையோ பயன்படுத்து வதால் உருப்படியான பலன் கிட்டாது. ’’ தம்முடைய கொள்கையை விரைவாக, முறையாக மக்கள் மனத்தில் பதிய வைக்க எளிதான் முறையில் மொழியைப் பயன் படுத்தவேண்டும் என்பதை இலெனின் வலியுறுத்திச் சுட்டிக் காட்டுகிறார். "தோழர்களே! எந்தெந்தச் சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கருத்துக் கோவையை உண்டாக்குகிறோம் என்பதை ஒருமுறை எண்ணிப் பாருங்கள். ஏழைப் பாட்டாளிகட்கு அரசியல் தெளிவு இருக்க முடியுமா? அவர்கள் என்ன சமன்மைக் குடியரசு வாணர்களா? அவர்களிடம் பேசியதையே மீண்டும்.மீண்டும் சின்னஞ் சிறியவற்றைப் பென்னம் பெரிதாக்கி உயர் நடையில் புலப்படுத்துவதால் என்ன பயன்? எல்லோரும் எல்லாம் அறிந் தவர்களாக எல்லோரையும் கருதிக் கொள்வது சரியில்லை. அப்படி இருந்துவிட்டால் ஏழைத் தொழிலாளர்களுக்கு அரசியல் தெளிவு இருப்பதாகக் கருதலாம். எனவே, அப்படித் தவறான கருத்தைத் தொழிலாளர் வகுப்பிற்குக் கற்பிப்பது அவர்களின் தனி அமைப்பிற்கும் உரிமைக்கும் கேடு விளைவிப்பதாகும். -சமன்மைக் குடியாட்சியில் உண்மையான உரிமை இருக்க முடியும். சேரவேண்டிய இடத்திற்குப் போகவேண்டிய பாதை .யில்தான்் போகவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/34&oldid=713831" இலிருந்து மீள்விக்கப்பட்டது