பக்கம்:மொழியைப் பற்றி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மொழியைப் பற்றி...

ஏற்றத்தாழ்வை நிலைநிறுத்தவும் அந்தக் குடியரசு இடம் கொடுக்கிறது. ஆண்களுக்கு ஒரு நீதி, பெண்களுக்கு ஒரு நீதி என்று நிலை நிறுத்துகிறது. - ஆனால் சமன்மைக் குடியரசு அப்படியன்றே. நில உடைமை யாளர்கள், முதலாளிகள், ஆகியோரின் புரட்டுகளை அம்பலப் படுத்தி, அவர்கள் கூட்டாக மிகை விளைவுப் பொருள்களைப் பட்டினியால் வதைப்படும் தொழிலாளர்களுக்கே அதிக விலைக்கு விற்றுக் கொள்ளயைடிப்பதை எதிர்த்துப் போராடச் சமன்மைக் குடியரசு வழி வகுக்கிறது.

நாம் கட்சி என்ற சொல்லை விரும்பவில்லை. அதனைப் பயன் படுத்தக்கூடாது என்றும் கூறுகிறோம். ஏன் ? இங்கிலாந்தில் உள்ள தோழர்களும் கட்சி அமைப்பை வெறுக் கிறார்கள். தொழிலாளர் வகுப்பிற்கு எதிரான தனிப்பட்ட தலைவர்களின் விருப்பத்திற்காகவே அங்குக் கட்சிகள் அமைக்கப்படுகின்றன. இன்று இங்கிலாந்திலும் அமெரிக்கா விலும் அப்படிப்பட்ட நாடாளுமன்ற முறை இருப்பதாகக் கூறினால், நாமும் அப்படிப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு எதிரானவர்களே. நமக்கு என்ன வேண்டும்? மக்களுடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டு, அவர்களை வழிநடத்திச் செல்லக்கூடிய கட்சிகள்தாம் நமக்கு வேண்டும்' என்று பல் வேறு குடியாட்சி முறைகளை விளக்கிச் சமன்மைக் குடியாட்சி யின் சிறப்பை விளக்குகிறார் இலெனின். மேலும் உண்மையான அரசியல் கட்சிகள் ஒரு சிலரின் விருப்பு, வெறுப்புக்கு மட்டுமே இயங்குவதால், மக்களுக்கு உருப்படியான தொண்டு செய்திட இயலாது என்பதை வலியுறுத்துகிறார். மக்களுடன் தொடர்பும், மக்களின் ஆதரவைப் பெற்ற கட்சிகளே, மக்களுக்குத் தேவையான மேம்பாடுகளைச் செய்ய முடியும் என்பதைத் தெளிவாக்குகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/36&oldid=713833" இலிருந்து மீள்விக்கப்பட்டது