பக்கம்:மொழியைப் பற்றி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசியச் சிக்கலும் மொழிக் கொள்கையும்:

"அவரவர் தம்தம் தாய்மொழியில் கல்விகற்கும் உரிமை இருக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய தாய்மொழியில் கூட்டங் களில் பேசவும், அரசு அமைப்புகளில் தாய்மொழியில் கலந்துரை யாடவும் உரிமை இருக்க வேண்டும். மக்கள் பொதுவாக எங்கும் தங்கள் மொழியில் பேசுவதற்கு உரிமை இருக்க வேண்டும்’ ’ உலகின் வளமான பல மொழிகளில் பயிற்சி பெற்ற இலெனின், அயலார் மொழிகள் மீது விருப்பம் கொள்ளாமல், தம்முடைய தாய்மொழிப் பற்றை வெளிப்படுத்தும் முறையில் அழுத்தம் திருத்தமாகத் தம் கட்சியில் இரண்டாம் மாநாட்டில் கட்சியின் திட்டம் பற்றிப் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது. விருப்ப முள்ளவர்கள் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்கலாம்-அதன் மூலம் பெறக்கூடிய அறிவு வளர்ச்சியைப் பெறலாம்; ஆனால் அந்த மொழிகளின் மூலம் பெற்ற அறிவைத் தம் தாய்மொழியில் மட்டுமே, தாய்மொழியைக் கொண்டே, தாய்மொழியின் மூலமே பயன்படுத்த வேண்டும் என்பதையும், பயிற்றுமொழி தாய்மொழிதான்் என்பதும் இலெனினின் தெளிவான, உறுதியான முடிவு. மக்கள் எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பு அதிக மாகக் கொண்டது தாய்மொழியே. வேற்று மொழியில் வலிந்து கூறப்படும் கருத்துகள் மக்களுக்கு உருப்படியான பயன்த்ராது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். புரட்சி வெற்றிபெற, மக்களின் ஆதரவுபெற எளிதான் கருவி தாய்மொழி என்பதை அவர் உணர்ந்து பேசியிருப்பது நமக்குப் பாடமாகும்.

அன்புள்ள நண்பரே! உருசியாவிற்கு ஒரே ஒரு மொழி ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்கள். நாடு முன்னேற அப்படி ஓர் ஆட்சிமொழி இருப்பது இன்றியமையாதது என்று நீங்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறீர்கள். உங்கள் கருத்திை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/37&oldid=713834" இலிருந்து மீள்விக்கப்பட்டது