பக்கம்:மொழியைப் பற்றி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$8 மொழியைப் பற்றி...

மார்க்சியத்திற்கு எப்படிப்பட்ட நல்ல விளக்கம் தரப்பட்டாலும், அது சிறந்ததாக, உயர்ந்ததாகக் கருதப்பட்டாலும், அது தேசியத்திற்கு ஈடானது என்று கூற இயலாது. மார்க்சியத்தின் தேசியம், எல்லா நாடுகளும் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்று அனைத்துலக ஒருமைக்கு அழைத்துச் செல்கிறது. அமைக்கப் படும் ஒவ்வொரு தொலைக்கல்லும், தொடர் வண்டிப்பாதையும், அனைத்துலக அடிப்படையில் அமையும் புதுப்புது உலகத் தொழிலாளர் சங்கங்கள் இயங்கவே நேரிடுகின்றன. தேசியத்தை உடைப்பதற்குத் தொழிலாளர் வகுப்பு ஒரு போதும் இடம் தராது. மாறாகத் தேசிய வளர்ச்சிக்குப் பாடு பாடுவதே தொழிலாளர் வகுப்பின் நோக்கம். அதே நேரத்தில் தேசியத்தின் பெயரால் பல வேறு தேசிய இனங்கள் ஒன்று படுவதைத் தொழிலாளர் வகுப்பு அக்கறையுடன் ஊக்கி வைக்கிறது. இதற்கு மாறாகச் செயல்படுவது பிற்போக்குத் தேசிய அநாகரிகமாகும். அதே நேரத்தில் அரசியல் முடிவுகள், வகுப்பின் அடிப்படையில்தான்் ஒடுக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இனங்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படுவது இலலை. இதையும் மீறி முழுக்க முழுக்கத் தேசியப் பண்பாடு என்று சமூகத்தில் நடைமுறைப் படுத்துவது கேடான விளைவுகளை உண்டாக்கும். அதனால் ஏழைத் தொழிலாளர் வகுப்பு தாக்குறும்.' - என இலெனின் தேசியத்திற்கும், இனநலனுக்கும் உள்ள வேற்றுமையைத் தெளிவுபடுத்துகிறார். தேசியத்தின் பெயரால் இனநலன் தாக்கப்படும் வாய்ப்பும், பல்வேறு இனத்தைச் சார்ந்த தொழிலாளர் வகுப்பு தாக்கப்படும் என்பதையும் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.

  • சுவிட்சர்லாந்து நாட்டில் மொத்தம் மூன்று மொழிகள் தேசிய மொழிகளாக ஏற்றுக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. திறைவேற்றப்படும் சட்டங்கள் மக்கள் கருத்தை அறிய ஐந்து மொழிகளில் அச்சிடப் படுகின்றன. அதாவது உரோமானிய மொழி வழிவந்த இரு மொழிகளிலும் அச்சிடப் படுகின்றன, 1900-ஆம் ஆண்டு எடுத்த மக்கள் தொகைக் கணிபயில்,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/40&oldid=713837" இலிருந்து மீள்விக்கப்பட்டது