பக்கம்:மொழியைப் பற்றி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மொழியைப் பற்றி.

ஆட்சி மொழி என்றால் என்ன ? உருசிய மொழியை நாட்டு மக்கள் எல்லோரின் மீதும் திணிப்பதுதான்ே !

உருசிய மொழி அனைத்துக் கல்விக்கூடங்களிலும் பயிற்று விக்க வகைசெய்வதுதான்ே !

மடல் போக்குவரத்து அனைத்தும் ஆட்சிமொழியிலேயே இருக்கவேண்டும் என்பதுதான்ே !

அந்தந்த மக்கள் வாழும் பகுதிகளில் அவர்களின் தாய் மொழியைப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான்ே !

இப்படிப்பட்ட ஆட்சிமொழிக் கொள்கையை ஏற்பவர்கள் எந்த உண்மையின் அடிப்படையில் செய்கிருர்கள்.

உருசிய மொழியை தாய்மொழியாகக் கொள்ளாதவர் களைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதற்கு இது தான்் வழி என்று சிலர் கூறுகிறார்கள். உருசிய நாடு பிளவு பட்டுப் பிரிந்து போகாதிருக்க இம்முயற்சி தேவை என்று சிலர் கூறுகிறார்கள்.

உருசிய மொழி பேசுபவர்களால்தான்் உருசிய நாடு ஒன்றாக, ஒற்றுமையாக மலர முடிந்திருக்கிறது. எனவே மற்றவர்கள் உருசிய மொழியினருக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று சிலர் முறையிடுகிறார்கள். மாநில மொழிகள் (உருசிய மொழி தவிர மற்ற மொழியினர்) ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்தான்் வளர்க்கப்பட வேண்டும்-ஒரு குறிப்பிட்ட ஆட்சி மொழிமைப் பேணுவது, நாட்டின் ஒற்றுமையையும், பண்பாட்டையும் பாதுகாக்கத் தேவை என்று சிலர் கூறு கிறார்கள். அவர்களின் கூற்றை மறுக்கவில்லை. ஆனால் நாம் எதை விரும்புகிறோம். உருசிய நாடு முழுவதும் ஒடுக்கப் பட்ட நிலையில் வாழ்ந்த பல்வேறு இனத்தவர்களையும், ஒன்று படுத்தி, அவர்களிடையே ஒற்றுமையை உண்டாக்க விரும்பு கிறோம். உருசிய மொழியைக் கற்கும் வாய்ப்பு எல்லோருக்கும் ஏற்படுவதில் தவறில்லை. ஆனால், அதில் கட்டாயப் படுத்தும் நிலை இருக்கக் கூடாது. அதற்காக மக்களைப் பெருத்த தடி கொண்டு தாக்கி விரட்டக் கூடாது. என்னதான்் பண்பாட்டின் சிறப்புகள் கூறப்பட்டாலும், ஆட்சிமொழியின் பெயரால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/42&oldid=713839" இலிருந்து மீள்விக்கப்பட்டது