பக்கம்:மொழியைப் பற்றி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின் 41

வல்லந்தம் மேற் கொள்வதை நாம் விரும்பவில்லை. உருசிய மொழியைக் கட்டாயப்படுத்திப் படிக்கவைக்க வேண்டிய தேவை இல்லை. உருசியாவில் முதலாளியம் பெரும் பேயாக வளர்ந்திருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறோம். இன்று உருசிய மக்கள் ஓர் இடததில் இருந்து மற்றோர் இடத்திற்குக் குடி பெயர்ந்து பிற இனத்தவருடன் கூடி வாழவேண்டிய நிலை ஏறபட் டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த நிலையில் யார் யார் உருசிய மொழியைக் கற்கவேண்டிய கட்டாய நிலை ஏற்படுகிறதோ அவர்கள் தாங்களாகவே உருசிய மொழியைப் படிக்க முற்பட்டுவிடுவார்கள். அதனால் தனித் தன்மைகள் தாமாக மறையும். அதே நேரத்தில் கட்டாயப் படுத்துவதன் மூலமோ, ஆட்சி மொழியை வல்லந்தமுடன் திணிப்பதன் மூலமோ, பிற மொழி யினருக்கு உருசிய மொழி மீது வெறுப்பும், பகைமையும் உண் டாகும். அதன் விளைவாக எளிதில் நன்றாக வளரக் கூடிய உருசிய மொழி வளர்ச்சி பெற முடியாமல் போய்விடும் என்பது உறுதி. மற்ற மொழியினர் உருசிய மொழியைக் கற்பதற்கு அஞ்சும் நிலை ஏற்படும். மேலும் பலப்பல சிக்கலான விளைவுகள் ஏற்பட்டு ஒற்றுமை குலைந்து, வேற்றுமை அதிகரித்துப் பல வகையான தவறான எண்ணங்கள் உண்டாக வழி ஏற்படும். அப்படிப்பட்ட ஆட்சிமொழியை யார் வரவேற்பார்கள்? அந்த மொழி யாருக்கு வேண்டும்? இந்த நிலையில் உண்மைகளைக் குறிப்பாக, நாட்டில் மலிந்து விட்ட கொடுமைகளைப் பொருட்படுத்தாதவர்கள்தாம் அப் படிப்பட்ட ஆட்சி மொழியை வரவேற்கக்கூடும். அதல்ைதான்் உருசிய மார்க்சியவாணர்கள் எந்த மொழியையும் ஆட்சி மொழியாகத் திணிக்கப்படக் கூடாது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். நாடு முழுவதும் கல்வியை அவரவர்களின் மாநில மொழிகளிலேயே கற்பிக்கப்பட வேண்டும் என்கி றார்கள். மேலும், ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்து, அரசியல் சட்டத்தில் இதற்கான மாற்றம் செய்திட வேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/43&oldid=713840" இலிருந்து மீள்விக்கப்பட்டது