பக்கம்:மொழியைப் பற்றி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மொழியைப் பற்றி....

என்கிறார்கள். பெருநாட்டின் சிறுபான்மை மக்களின் உரிமை களைப் பாதுகாக்கவும், எந்த ஒரு சிறு தேசிய இனத்தின ருக்கும் உரிய சம உரிமை பாதுகாக்கவும் அப்படிப்பட்ட ஒரு சட்டப் பாதுகாப்பு செய்வது தேவை என்று உருசிய மார்க்சிய வாணர்கள் கருதுகின்றனர்' என்று இலெனின் அறிவிலிக்கும் கூட புரியக்கூடிய எளிய முறையில் ஆட்சி மொழியைப் பற்றி விரிவாக, விளக்கமாக, பட்டறிவு வழி தெளிவுபடுத்தி இருக்கிறார். இதற்கு மற்றும் ஒரு காரணமும் இருக்கிறது. உருசிய மொழி என்பது ஒரு தனிப்பட்ட தன்மை கொண்ட மொழி அன்று. கணக்கெடுப்பின் போது மாபெரிய உருசிய மொழி, பைலோ ரசிய மொழி, உக்ரேனிய மொழி ஆகியவற்றையும் சேர்த்து இணைத்துத்தான்் உருசிய மொழி என்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அப்படியும் கூட உருசிய மொழி பெருவாரியான மக்கள் பேசும் மொழி என்று எடுத்துக்கொள்ள வழியில்லை. மற்ற மொழிகளைப் பேசுபவர்களைவிட உருசிய மொழி பேசுபவர்கள் அதிகமாக இருக்கின்றனர் என்பதே உண்மை ! இதிலிருந்து இப்படிப்பட்ட ஆட்சி மொழிச் சிக்கலில் அல்லல் படும் மக்கள் எங்கு வாழ்ந்தாலும், எந்த நாட்டினரானாலும் பெற வேண்டிய தெளிவைப் பெற்று நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாத்து, வாழும் இனத்தினர் எல்லோரும் சமநிலை, சம உரிமை, சமன்மை பெறும் வகையில் ஆட்சி மொழிக் கொள்கையை அமைத்துக் கொள்ள இலெனின் நல்ல பாதை காட்டியிருப்பது குறிப்பிடத் தக்கது. 'பல வேறு இன மக்களுக்கிடையே சமஉரிமை இருக்க வேண்டும். எல்லா மொழிகளும் சம நிலையில் கருதப்பட வேண்டும். இதுவே மார்க்சியவாணரின் குறிக்கோள்; மக்கள் ஆட்சிக்கு இது நீடித்து இருக்க வேண்டும். ஏழைத் தொழி லாளரிடையே ஒற்றுமைக்கும், தோழமைக்கும் இது இன்றி யமையாதது. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர் சுளுக்கு எந்தவித நம்பிக்கைக் கேடும், ஐயங்களுக்கு இடமும் மக்களாட்சியில் இருக்கக் கூடாது. அனைவருக்கும் சமஉரிமை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/44&oldid=713841" இலிருந்து மீள்விக்கப்பட்டது