பக்கம்:மொழியைப் பற்றி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின் #18

சம்வாய்ப்பு தருவது என்பது எளிமையானதன்று. மேலும் அதற்குச் சட்டமுறையில் பாதுகாப்பும் தரப்பட வேண்டும். தொழிலாளர் ஒற்றுமையை எந்தக் காரணம் கொண்டும் உடைக்கக் கூடாது. அதனால்தான்் நாட்டில் ஆட்சிமொழிக் கொள்கையில் மார்க்சியவாணர் தெளிவான கொள்கையை வகுத்துக் கொடுத்திருக்கின்றனர். ஒரு நாட்டில் வாழும் அனைத்து மொழி இனத்தவரையும் ஒன்றுபடுத்தப் பாடு படுவதே மார்க்சியம், அந்தந்த மாநிலத்தில் குடியிருக்கும் மக்கள் அவர்களின் மொழிக்கு எந்தவகைக் குறைபாடும் இல்லை என்பதை நிலை நாட்டுவதற்கு வழிகோலுவதே மார்க்சியம்’ என்று இலெனின் மார்க்சியத்தை உருசிய நாட்டின் நிலைமை களைக் கொண்டு (உலகுக்கு)விளக்கி இருக்கிறார். * சமன்மையின் குறிக்கோள் மனித சமுதாயத்தைச் சிறுசிறு மாநிலங்களாகப் பிரிப்பது அன்று. எந்த ஓர் இனத்தையும் தனிமைப்படுத்துவதும் சமன்மை இல்லை; மாறாகப் பல்வேறு இனத்து மக்களை ஒன்று சேர்ப்பதும், அவர்கள் கூடி வாழ்வதற் கான முறைகளைக் கையாளுவதுதான்் சமன்மையம். இதை ஒரு சிலர் பண்பாட்டுத் தேசிய உரிமையின் மூலம் பெறமுடியும் என்று கருதுகிறார்கள். ஆனால், ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களில் முழு விடுதலைக்காக வகுக்கப்படும் அரசியல் திட்டம்; இதனால் பாதிக்கப்படக் கூடாது; இதுதான்் சமன்மையத்தின் நோக்கம். மனித சமுதாயத்தில் உள்ள பல்வேறு வகுப்புகளுக்கு இடையே உள்ள வேற்றுமைகளை அகற்றுவதே சமன்மையம். இந்தக் குறிக்கோளை அடைய சிறிது காலம் பிடிக்கும். ஆனால், இறுதியில் பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு வந்திருக்கும் இனத்தை மீட்டு அவர்களுக்கு புதுவாழ்வு முழு உரிமை அமைதற்குச் சமன்மையமே உரிய வழியாகும்' என்கிறார் இலெனின். -

கல்வியைத் தம்முடைய தாய்மொழியில் பயில்வதற்கான உரிமையை மக்கள் எல்லோருக்கும் அளிக்கப்பட வேண்டும். அதற்கான கெலவை அரசாங்கமே ஏற்கவேண்டும். அந்தந்தங் பகுதிகளிலே வாழும் மக்கள் அவரவர்கள் மொழியிலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/45&oldid=713842" இலிருந்து மீள்விக்கப்பட்டது