பக்கம்:மொழியைப் பற்றி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்களும் அதன் பொருளும்

மதம் என்பது தனிப்பட்ட ஒருவரின் தனிச் செய்தி என்று சமன்மையர்கள் மதத்தைப் பற்றிக் கூறுகிறார்கள். இப்படிக் கூறும்போது பயன்படுத்தப்படும் சொற்களுக்குத் தெளிவான பொருள் என்ன என்பதை மக்களுக்குப் புகட்ட வேண்டும், அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் மதம் தனிப்பட்ட ஒன்ருகக் கருதப்பட வேண்டும் என்று நாம் கூறுகிறோம். நமது கட்சியைப் பொறுத்தவரை நாம் மதம் ஒரு தனிப்பட்ட செய்தி என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது. மதத்திற்காக எந்த வித அக்கறையும் அரசாங்கம் எடுத்துக்கொள்ளக் கூடாது. மதச் சார்புடைய அமைப்புகளுக்கும் அரசுக்கும் எந்தவிதத் தொடர்பும் இருக்கக் கூடாது. எந்த ஒரு குடிமகனுக்கும் அவனவன் விருப்பப்படி மதத்தைப் பின்பற்ற உரிமை இருக்க வேண்டும். அதேபோல ஒரு குடிமகன் எந்த மதத்தையும் விரும்பவில்லை என்றால் அவன் கடவுளிலியாக இருக்கவும் உரிமை தரப்பட்டாக வேண்டும். அப்படி கடவுளிலியராக இருப்பவர்களே சமன்மையினர். மதத்தின் அடிப்படையில் மக்களிடையே வேற்றுமைகளை உண்டாக்குவது பொறுக்க முடியாததாகும் ’’ என்று தெளிவாக மதச் சார்பற்ற அரசு எந்த ஒரு மதத்தை யும் ஆதரிப்பதோ, மதத் தொடர்புகளில் தலையிடுவதோ கூடாது என்பதை இலெனின் கூறி இருக்கிறார். மதசார்பற்ற கொள்கையை விளக்கும்போது மக்களுக்குத் தெளிவாகப் புரியக்கூடிய சொற்களில், ஐயத்திற்கோ, அலக் கழிப்புக்கோ, அச்சத்திற்கோ இடமளிக்காத முறையில் விளக் கப்பட வேண்டும் என்கிறார். ஒரு குடிமகன் ஒரு மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. எந்த மதத்தையும் பின்பற்றாத கடவுளிலியாக இருப்பவனே சமன்மையன் என்று குறிப்பிட்டிருப்பது கடவுளிலியத்தைத் தடுக்க வேண்டும், தடை செய்ய வேண்டும் என்று மதவெறி பிடித்து அலைபவர்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/48&oldid=713845" இலிருந்து மீள்விக்கப்பட்டது