பக்கம்:மொழியைப் பற்றி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாராட்டுரை

சிலம்பொலி க. செல்லப்பன் இயக்குநர்-தமிழ் வளர்ச்சி இயக்ககம், சென்னை,

இல்லையென்ற சொல்லை உலகில் இல்லையாகச் செய்வோம்' எனச் சூளுரைத்துப் பாடுபட்டு வெற்றி கண்டவர் மாவீரர் இலெனின். உலகம் உண்ண உண் : உடுத்த உடுப்பாய் புகல்வேன் உடைமை மக்களுக்குப் பொது ; புவியை கடத்து பொதுவில் கடத்து - எனச் கொள்கை முழக்கம் செய்த இலெனின் மொழிபற்றிய தெளிந்த சிந்தனைகளைத் திரு. கோவேந்தன் இந் நூலுள் தந்துள்ளார்.

இந்தியாவைப் போலவே உருசியாவும் பல் வேறு மொழிகள் கொண்ட நாடு. சார் மன்னனின் கொடுங்கோலாட்சியிலிருந்து விடுபட்டு மக்க ளாட்சி மலரக் காரணமாயிருந்த இலெனின், அந் நாட்டு மொழிச் சிக்கல்களுக்குச் சொன்ன தீர்வு நம் நாட்டிற்கும் முற்றிலும் பொருந்துவதாகும். பொதுவுடைமைத் தோழர்கள் மொழியில் மிகு நாட்டம் கொள்வதில்லை என்று பொதுவாகச் சொல்லப்படும் கூற்று எவ்வளவு தவறானது என்பதை இந் நூலைப் படிப்போர் நன்குணர்வர். உருசிய மொழியில் தேவையான சொல் இருக்கும் போது வேண்டுமென்றே பிறமொழிச் சொற்களைக் கையாளுவதை இலெனின் கடுமை யாகக் கண்டித்தார் (பக். 19) என்னும் கூற்றினைக் தனித் தமிழ்க் கோட்பாட்டுக்கு எதிரானோர் சிந்தித்தல் வேண்டும்.

அவரவர் தத்தம் தாய்மொழியில் கல்வி கற்கும் உரிமை இருக்க வேண்டும் (பக். 35);

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/5&oldid=713802" இலிருந்து மீள்விக்கப்பட்டது