பக்கம்:மொழியைப் பற்றி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மொழியைப் பற்றி....

சொல் அப்பாற்பட்டது என்று இலெனின் கூறுகிறார். இது முற்றிலும் உண்மை. ஒரு சொல்லின் தோற்றத்தையும், அதன் வரலாற்றுப் பின்னணியையும், அதன் பயனையும் இலெனின் எந்த அளவிற்கு ஆய்வு செய்திருக்கிறார் என்பதிலிருந்து நாம் அவரின் எண்ண ஆற்றலால் நன்கு புரிந்துகொள்ள இயலும்.

★ * உரிமை என்கிற சொல் மிகமிக அழகான சொல். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அதனை நாம் சந்திக் கிறோம். வாணிப உரிமை, விற்பனை உரிமை, தன்னையே கூட விற்பனை செய்துகொள்ளும் உரிமை என்பன போன்ற பல உரிமைகளைக் கண்டு வருகிறோம். - மெத்தனக்காரர், சமன்மைப் புரட்சியாளர்கள், மற்றும் சில கயவர்கள், இந்த உரிமை என்ற சொல்லுக்கு உரிய அழகான பொருளைச் சிதைத்துத் திரித்துப் பேசி வருகின்றனர். அவர்கள் எல்லாம் குறுகிய ந்ோக்கம் கொண்டவர்கள்; முதலாளிகளின் வைப்பாட்டிகள், மக்களைப் பழமைக்கு இழுத்துச் செல்லும் பிற்போக்குவாணர்கள்' என்று இலெனின் அரசியல் புரட்டர்களுக்கும், தரமற்ற செய்தித் தாள்களுக்கும் சூடு கொடுத்திருக்கிறார்.

சுரண்டும் வகுப்பைத் தவிர்த்துத் தொழிலாளர்கள். உழைக்கும் உழவர்கள், தொழிலாளர்கள் மட்டுமே அதிகாரம் செலுத்தும், ஓர் அரசை முதன் முதலில் உருசியாவில் அமைத்திருக்கிறோம். இது உலக வரலாற்றில் இடம் பெற்ற

தாகும். அது தான்் நமது சோவியத்து அரசு. பலரின் தரக்குறைவான ஏசல்களுக்கிடையே நம் பாட்டாளி வகுப்பு முகவர்கள் பல நாடுகளில் பரவி உருசியாவின் சிறப்பை நிலை நாட்டிச் சோவியத்து அரசுக்கு சிறப்பைத் தேடித் தந்துள்ளனர்.

இப்போது சோவியத்து என்றால் எல்லோருக்கும் புரிகிறது. சோவியத்து ' என்ற வார்த்தையை வையகமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/50&oldid=713847" இலிருந்து மீள்விக்கப்பட்டது