பக்கம்:மொழியைப் பற்றி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மொழியைப் பற்றி....

நாட்டுடைமையாக்குவது என்றால் பயிர் நிலம் முழுவதையும் அரசுக்கு மாற்றி உரிமையாக்குவதாகும். அரசு உடைமை என்கிறபோது, நிலத்திற்கான வாடகையைப் பெற அரசுக்கு உரிமை உண்டு. அதற்கான சட்டங்களை உருவாக்கி; நாடு முழுவதும் நிலத்தைக் கொண்டு பயிரிட்டுப், பயன் பெறுபவர் களையும் அரசு கட்டுப்படுத்த விதிகளை உண்டாக்கும் செயல் பட அரசுக்கு அதிகாரம் உண்டு. ’’ என்று இலெனின் இழப்பீடு கொடுத்து உடைமையைக் கைப்பற்றும் அரசுமுறைக்கு எதிர்ப்புக் காட்டியிருக்கிறார்.

女 "மிரட்டுப்பறி அச்சுறுத்திப் பணம் பறிப்பது என்ற சொல்லுக்கு உரிய பொருள் இதுதான்். ஒரு குறிப்பிட்ட உண்மைகளை வெளிப்படுத்தி விடுவேன் என்றோ, அல்லது கற்பனைக் கதைகளைக் கூறித் தீங்கு உண்டாக்குவேன் என்றோ பயமுறுத்தி, வெளியிடாமல் இருக்கப் பணம்கேட்டு அச்சுறுத்திப் பெறும் செயலுக்குதான்் பிளாக்மெயில்’ என்பதற்குப் பொருள் ஆகும். - יאי "ஒரு தனிப்பட்ட மனிதனுக்குப் பிடிக்காததை, அவனைப் பாதிக்கக் கூடியதை, அவனுக்குத் துன்பம் உண்டாக்கக் கூடியதைச் செய்வது மிரட்டுப்பறி ! அரசியல் மிரட்டுப்பறி(பிளாக் மெயல்) என்பது வெளிப்படுத்தி விடுவேன் என்று அச்சுறுத்தல் மட்டுமல்ல-வெளிப்படுத் தியதைத் தொடராமல் நிறுத்திக் கொள்ளவும்.பேரம் பேசிப் பணம் பறிப்பதாகும். ஓர் அரசியல் எதிரியைப் பற்றி தவறான எண்ணத்தை உண்டாக்கி, மேலும் அவன் அரசியலில் செயல் பட முடியாத அளவிற்கு நிலமையை உண்டாக்குவதும், அரசியல் அச்சுறுத்தல்தான்்' என இலெனின் அரசியலில் எப்படிப்பட்ட எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும் என்பதையும், எப்படி அரசியலில் சூழச்சிக் காரர்கள் திருவிளையாடல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் மொழி நுட்பத்துடன் தெளிவு படுத்தி இருக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/52&oldid=713849" இலிருந்து மீள்விக்கப்பட்டது