பக்கம்:மொழியைப் பற்றி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மொழியைப் பற்றி.

"நாம் நம்மைப் பொதுவுடைமையர் என்று கூறிக்கொள் கிறோம். பொதுவுடைமையர் என்றால் யார்? பொது வுடைமை என்பது இலத்தீன் மொழியைச் சேர்ந்த சொல். அந்தச் சொல்லுக்குப் பொது’ என்று பொருள்படும். தொழிற் சாலைகளும், மற்றும் உள்ள அனைத்தும் பொதுவாக மக்க ளுக்கே உரிமை, பொது நோக்கக்துடனே மக்கள் உழைக்க வேண்டி இருக்கிறது. அதுதான்் பொதுவுடைமை' என்று இலெனின் தன்னுரிமை, சோவியத்து அமைப்பு, எதிர்ப்புத் தன்மை ஆகிய சொற்களுக்கு உரிய பொருள்களைத் தெளிவாக விளக்கி இருக்கிருர், உழைப்பின் பயன் முழுவதையும் மக்களே நுகர்கின்ற நல்ல நோக்கம் பொதுவுடைமைவாணர்க்கு மட்டுமே உண்டு என்பது நாம் அறிகிறோம்.

- 女

உக்லான் - என்பது உருசிய மொழிச் சொல். சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் நான் மிகவும் விழிப்பாக இருப்பவன் என்பது மிகைப்படுத்திக் கூறுவது அன்று. சரியான பாதையில் இருந்துவிட்டு விலகிச் செல்வது இப்போது ஓரளவிற்குத் தலை எடுத்திருக்கிறது. பாதையை விட்டு விலகும் போக்குச் சீர்படுத்தக் கூடியதே. தவறியவர்களை நாம் திருத்தமுடியும் என்பது என் கருத்து. இதைத் தெளிவுபடுத்தும் நல்ல சொல் தான்் உக்லான் (தன்னுணர்வு). எதையும் மாற்ற இயலாதது இல்லை என்பதை உணர்த்துவதே இந்தச் சொல். எதையும் திருத்திச் சரி செய்யலாம் என்கிற நம்பிக்கை தருவதே இந்த சொல்லின் பொருள். முறையாக எச்சரித்துக் கொள்கையின் முழுமையான விளக்கம் தந்து, பிழை செய்பவர்களைத் திருத்திச் சரி செய்யலாம். முயன்றால் முடியாததில்லை.

சலுகை' என்றால் என்ன? விளைவிப்பை அதிகரிக்க அதிகார வகுப்பு முதலாளிகளுடன் கலந்து பேசி செய்துகொள்ளும் உடன்பாடுதான்், சலுகை என்பது. அந்த உடன்பாட்டின் மூலம் முதலாளிகள் அடிக்கும் கொள்ளையில், அரசு ஒரு பங்கு பெறுவதுதான்் சலுகை'. அரசு அடையும் பங்கு போக மீதி முழுவதையும் முதலாளிகள் மட்டுமே அடைகிருர்கள்’’ என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/54&oldid=713851" இலிருந்து மீள்விக்கப்பட்டது